ஹீரோ .. ஹீரோ ..
விஜயகாந்த் சமீபத்தில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் அல்லவா? திடீர் என்று குடும்பத்துடன் அவர் தமிழ்நாட்டை விட்டு ஓடிப் போக நேரிட்டது குறித்துசில சுவையான தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையிடத்திலிருந்து விஜயகாந்த்திற்கு ஒரு ஓலை வந்ததாம். ஓடிப் போய் பார்த்திருக்கிறார் கேப்டன்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் அல்லது அறிக்கை விட வேண்டும் என்று கறாராககூறப்பட்டிருந்ததாம்.
அதைக் கேட்ட கேப்டனுக்கு பெரும் குழப்பம். இந்தக் கட்சிக்கு ஆதரவு தந்தால், அந்தக் கட்சியின் தலைமை நம்மைக் கோபித்துக் கொள்ளுமே,என்ன செய்யலாம் என்று யோசித்த கேப்டன் அந்த நேரத்தில் வெளிநாட்டில் ஷூட்டிங் இருப்பதாக கூறி விட்டு குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓடி விட்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications