ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கர்நாடகத்தில் இனி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதில் பிரச்சனைகள் இருக்காது என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.

நாளை மறுநாள் விஜயகாந்த்தின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இன்று ஏழை மக்களுக்குஇலவச தையல் மிஷின்களையும் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அளித்தார் விஜயகாந்த்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழாவை நடத்தி தற்போது நடிகர் சங்கக்கடனை அடைத்து விட்டோம்.

விரைவில் திரைப்பட-நாடக நடிகர் அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு வருகிறோம்.

கர்நாடகத்தில் தமிழ் படங்களை உடனடியாக வெளியிடுவதில் இனிமேல் சிரமங்கள், தடைகள் எதுவும் இருக்காதுஎன்றார் விஜயகாந்த்.

பொதுவாக தமிழ் படங்களை பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் உடனடியாக ரிலீஸ் செய்யமுடியாது. தமிழகத்தில் வெளியாகி சில வாரங்கள் கழித்தே இங்கு தமிழ் படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.

இந்நிலையில் கர்நாடகத்தில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை இருக்காது என்று நடிகர் சங்கத்தலைவரான விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெசவாளர்களுக்கு உதவி:

இதற்கிடையே வேஷ்டி, சேலை விற்பனை இல்லாமல் பாதிக்கப்பட்டு பட்டினி கிடக்கும் ஏழை நெசவாளர்களுக்குஉதவும் வகையில் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலைகளை வாங்கி அவற்றை ஏழைமக்களுக்கு இலவசமாக வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி விட்ட பின்னர் அந்தஏழைகள் மட்டுமல்லாமல் அதை நெய்து விற்று வந்த கைத்தறி நெசவாளர்களும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக ஏழை நெசவாளர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள்திறக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து நெசவாளர்கள் உற்பத்தி செய்த வேஷ்டி, சேலைகளை தமிழக அரசேகொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அவ்வாறு விற்கப்படும் வேஷ்டி, சேலைகளைத் தான் விஜயகாந்த் ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஏழை மக்களுக்குஇலவசமாகக் கொடுக்கவுள்ளார்.

பிரம்மாண்ட விழா:

இதற்கிடையே விஜயகாந்த்தின் பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.

தமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகரான விஜயகாந்த்தின்பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரஜினி பாணியில் அரசியலில் நுழைவது குறித்து சஸ்பென்ஸாக இருந்து வரும் விஜயகாந்த், தனது அடுத்த "ரமணா"படத்தில் ரசிகர்களுக்கென்று சிறப்புச் செய்தி ஒன்றை வைத்துள்ளதாதக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X