Vijayakanth - விஷ பாம்பு வடிவேலுவை அடிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்.. கொந்தளித்த விஜயகாந்த் மேனேஜர்

சென்னை: உடல்நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதன் காரணமாக பலரும் சோகமடைந்தனர். தமிழ்நாட்டிலிருந்து பலரும் சென்னைக்கு வந்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் வடிவேலுவோ விஜயகாந்த் மரணத்துக்கு வரவில்லை. வந்தால் பிரச்னை ஆகியிருக்கும் என்றால் அவர் ஒரு இரங்கல் அறிக்கையையாவது வெளியிட்டிருக்கலாம் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் அதனையும் அவர் செய்யவில்லை. இது பலரிடம் கண்டனத்தை பெற்றிருக்கிறது.

விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு அரசியல் ரீதியாக சில துரோகங்கள் நடந்தன. அது விஜயகாந்த்துக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதனால் அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கிருந்து தமிழ்நாடு திரும்பியவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வாக வீட்டில் இருந்தார். அவ்வப்போது தொண்டர்களை மட்டும் சந்தித்துவந்தார்.

Vijayakanth Manager Rajendran Talks about Vadivelu Issue

உடல்நலக்குறைவு: ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்து அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது பெரும் இரங்கலை தெரிவித்தனர். தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் சென்னைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறையினர் அஞ்சலி: திரைத்துறையினரிலும் 98 சதவீதம் பேர் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்தால் உதவி பெற்ற விஜய் நேராக வந்தார். ஆனால் சூர்யாவோ வெறும் இரங்கல் வீடியோவோடு நிறுத்திக்கொண்டார். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் வரவில்லை. முக்கியமாக விஜயகாந்த்தால் வளர்ந்த வடிவேலுவும் வரவில்லை. அவர் வராதது பெரும் கண்டனத்தை சம்பாதித்தது.

என்ன காரணம்: வடிவேலு வராததற்கு காரணமாக, அவர் மட்டும் வந்திருந்தால் அந்த இடத்தில் கண்டிப்பாக வடிவேலு தாக்கப்பட்டிருப்பார் என்று கூறப்படுகிறது. அது ஒருபக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருந்தாலும்; சரி வரவில்லை. ஒரு இரங்கல் அறிக்கையையாவது கொடுத்திருக்கலாமே என்ற வாதத்தை ரசிகர்கள் வைக்கிறார்கள். ஆனால் வடிவேலு அதற்கும் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாகவே இருந்துவருகிறார். அதுவும் பலரிடம் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.

விஜயகாந்த் மேனேஜர் பேட்டி: இந்நிலையில் வடிவேலு வராதது குறித்து அவரிடமும், விஜயகாந்த்திடமும் பல படங்களுக்கு மேனேஜராக வேலை செய்த ராஜேந்திரன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில், "வடிவேலு யாரையும் வளரவிட மாட்டார். அவர் அவருடைய வாழ்க்கையை மட்டுமேதான் பார்ப்பார். தன்னுடன் நடிப்பவர்கள் யாருக்கும் கூடுதல் சம்பளம் கொடுக்கக்கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பார்.

விஷ பாம்பு: ஏன் அவர் அப்படி செய்ய வேண்டும். நம்முடன் இருப்பவரை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடையாது. ஆனால் விஜயகாந்த்துக்கு அந்த எண்ணம் இருந்தது. வடிவேலுவை அவர் எப்படி பார்த்துக்கொண்டார் என்று எனக்கு தெரியும். மாத்து துணிக்கூட இல்லாமல் வந்தவர்தான் வடிவேலு. அவர் ஒரு விஷ பாம்பு. வடிவேலு நடிக்காமல் இருந்தபோதுகூட அவர் நடிக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் ரொம்பவே ஆசைப்பட்டார்.

வடிவேலு வீடு விஜயகாந்த் வீட்டின் பக்கத்து தெருதான். அவரது வீட்டுக்குள் புகுந்து வடிவேலுவை அடிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை. ஏனெனில் விஜயகாந்த் வடிவேலு பக்கம் நிற்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்தார். விஜயகாந்த் மரணத்துக்கு வடிவேலு வந்திருந்தால் பிரச்னை ஆகியிருக்கும் சரி. ஆனால் இரங்கல் அறிக்கையையாவது அவர் கொடுத்திருக்கலாம். நன்றி கெட்ட வடிவேலு" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X