'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் மூலம் மாஸிவ் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் விஜயகாந்த் மழை பிடிக்காத மனிதன் படத்தின் மூலம் சினிமாவில் மாஸிவ் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் 1980களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் சில படங்களை இயக்கியும் உள்ளார். நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்த விஜயகாந்த் பலரும் பாராட்டும் வண்ணம் நடிகர் சங்கத்தை தூக்கி நிறுத்தினார்.

உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு

மேலும் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் படங்களில் அதிகம் தலைக்காட்டாமல் உள்ளார்.

அமெரிக்காவில் சிகிச்சை..

அமெரிக்காவில் சிகிச்சை..

கடைசியாக அவரது மகன் ஷண்முக பிரபாகரன் நடிப்பில் வெளியான சகாப்தம் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகாந்த்.

மழை பிடிக்காத மனிதன்

மழை பிடிக்காத மனிதன்

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு மாஸிவ் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிகர் விஜயகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மில்டன் இயக்கம்

விஜய் மில்டன் இயக்கம்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். இவர் தற்போது சிவராஜ்குமார் நடிக்கும் கன்னடப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதையடுத்து விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்குகிறார் விஜய் மில்டன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார்

முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார்

இந்தப் படம் விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தின் அடுத்த பாகம் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இந்தப் படம், முதல் முறையாக டாமன் அண்ட் டியூ பகுதியில் படமாக்கப்படுகிறது. விஜய் ஆண்டனி ஜோடியாக, மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில்தான்...

இந்தப் படத்தில்தான்...

கன்னட நடிகர்களான தனஞ்செயா, ப்ருத்வி அம்பர் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகின்றனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில்தான் நடிகர் விஜயகாந்த் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் இந்தப் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மாஸிவ் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் இந்த தகவலால் கேப்டன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவரை ஸ்க்ரீனில் காண ஆர்வமாக உள்ளனர்.

Recommended Video

உங்களுக்கு சினிமாத்துறைல ஆசை இருந்தா இதான் என்னோட Advice |Thalaivasal Vijay Chat-04 |Filmibeat Tamil
விஜய் ஆண்டனி இசை

விஜய் ஆண்டனி இசை

இந்தப் படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவும் செய்கிறார் விஜய் மில்டன். பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா, எஸ் விக்ரம் குமார் இணைந்து மழை பிடிக்காத மனிதன் படத்தை தயாரிக்கிறார்கள்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X