விஜயகாந்த்.. சண்முகப்பாண்டியன்.. 6 வித்தியாசம் கண்டுபிடியுங்க பார்ப்போம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் தனது திரையுலக வாரிசைக் களம் இறக்கி விட்டார். அவரது இளைய மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகிறார் .. சகாப்தம் மூலமாக.
சந்தோஷ்குமார் இயக்க, விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் மூலமாக, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது இந்தப் படத்தை.
படத்தோட ஸ்டில் அப்படியே புல்லரிக்க வைக்கிறது.. சின்ன வயசு விஜயகாந்த்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது சண்முகப் பாண்டியின் 'ஆங்கிரி யங்கு மேன்' தோற்றம்!

புலிப் பாய்ச்சல் போஸ்..
இந்தப் படத்தின் படத் தொடக்க விழா ஸ்டில்லில் விஜயகாந்த் பேக்கிரவுண்டில் கடும் கோபத்துன் கைகளை நீட்டியபடி புலி போல காட்சி தருகிறார்.

ஒரு கையில் கம்பு.. இன்னொரு கையில் டாட்டாவா...
அதில் வலது கையில் கம்பு இருந்திருக்கும்போல. அதை கிராபிக்ஸ் ரப்பர் வைத்து அழித்திருப்பது போலத் தெரிகிறது. இடது கையை விரித்தபடி காட்டுகிறார்.. அது டாட்டாவா அல்லது வராதே என்று மிரட்டுகிறாரா என்று தெரிவில்லை.. இது நிழல், நிஜத்திற்குப் போவோம்.

கருப்புப் பனியனில் கலகல பாண்டி
விஜயகாந்த்தின் மகன் கலர் போட்டோவில் போஸ் தருகிறார். அப்படியே அப்பாவைப் போல அட்டகாசமான கோபத்துடன் கூடுதல் கொடூரத்துடன் பயங்கர போஸ் தருகிறார்.

அதே கை.. அதை சைகை...
அப்பாவைப் போலவே இவரும் இரண்டு கைகளையும் தூக்கினாற் போல வைத்துள்ளார். வலது கை, கிரிக்கெட் வீரர்கள் பவுலிங் போடுவது போல காட்சி் தருகிறது.. இடது கை, அப்படியே கண்ணை நோண்டிருவேன் என்று சொல்வது போல உள்ளது.

அதே கண்கள்
விஜயகாந்த்தைப் போலவே கண்ணில் கலக்கல் மிரட்டலைக் காட்டுகிறார் மகன் சண்முகப் பாண்டியனும். உண்மையிலேயே தூள்...

புருவந்தான் கொஞ்சம்..
அப்பாவைப் போல சண்முகப் பாண்டியனும் புருவத்தை மட்டும் தூக்க முயற்சித்துள்ளார். அதில் இடது புற புருவம், அப்படியே விஜயகாந்த்தைப் போலவே தூக்கலாக இருக்கிறது. வலது புருவம் பெரிதாக தூக்கவில்லை. நீட்டமாகவே இருக்கிறது.

அப்பாவுக்கு கர்லிங்.. மகனுக்கு லைட் டர்ரியல்..
அப்பா விஜயகாந்த் பாதி கர்லிங் ஹேர்ஸ்டைலுடன் காணப்படுகிறார். மகன் தலைமுடிதான் லைட்டாக டர்ரியல் ஆனது போல இருக்கிறது. ஆனாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு.
மொத்தத்தில் பார்க்க கிட்டத்தட்ட விஜயகாந்த்தைப் போலவே இருக்கிறார் சண்முகப்பாண்டியன்.. வசன உச்சரிப்பிலும் அப்பாவைப் போல பொளந்து கட்டுவாரா அல்லது புகுந்து புறப்படுவாரா என்பதை படம் வந்த பிறகுதான் பார்க்க வேண்டும்...


Click it and Unblock the Notifications











