ஹீரோ .. ஹீரோ ..

By Staff

அரசியல் களம் புக நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவரது சமீபத்திய பேச்சும், மன்றநடவடிக்கைகளும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

""என்னுடைய 22 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 20 ஆண்டுகள் சமூக சேவை செய்து வரும் நான்அரசியலுக்கு வரக் கூடாதா? என்று வெளிப்படையாக பேசும் அளவுக்கு விஜயகாந்த் தயாராகி விட்டார்.

திரைப்படத்தில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் வரிசையில் மிக விரைவில் இடம் பெறவிருக்கும்விஜயகாந்த், சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நடவடிக்கையை, அரசியல் பாணியில் திசை திருப்பி விட்டுள்ளார்.

மன்றத்திற்கென தனிக் கொடி அறிமூகம், ஊர் ஊராக கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ரசிகர்கள் பட்டாளம் படை சூழகொடியேற்றி சிறப்புரை என்று அரசியல் தலைவருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் நடைபோட ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த்.

பரபரப்பான சினிமா பணிகளை ஒரு பக்கத்தில் கவனித்துக் கொண்டு, மறுபக்கத்தில் இதுபோன்ற வேலைகளில்கண்ணும் கருத்துமாக இருக்கும் விஜயகாந்த், திண்டுக்கல்லில் ரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் ஆர்வத்தைமுதல் முறையாக வெளிப்படுத்தினார்.

ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையில் விஜயகாந்த் பேசிய பேச்சு இதோ:

தனிக் கொடி எதற்கு? இவரென்ன அரசியல்வாதியா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். ஏன் நான் அரசியலுக்குவரக் கூடாதா? தேர்தலில் நிற்கக் கூடாதா?

என்னுடைய 22 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 20 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறேன்.விதவை பெண்களுக்கு தையல் இயந்திரம், ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர வண்டிகள், காதுகேளாதவர்களுக்கு கருவிகள் என்று வழங்கி பொது சேவையில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.

இதுபோன்ற பொதுச் சேவை செய்யும் நான் அரசியலுக்கு வரக் கூடாதா? இதே திண்டுக்கல்லில் எம்ஜிஆருடன்மாயத்தேவருக்காக ஓட்டுக் கேட்டவன். வத்தலக்குண்டில் திமுகவுக்கு ஓட்டு கேட்டவன். அப்படிப்பட்ட நான்அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?

ஆனால், அதற்கு இது சரியான தருணமல்ல. இப்போது ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்விஜயகாந்த்.

திண்டுக்கல் பேச்சின் தொடர்ச்சியாக பல இடங்களில் சமூக ஒற்றுமை, தமிழ் உணர்வு, சாதி சங்கங்களின் ஆதிக்கம்என்று ஒரு கைதேர்ந்த அரசியல் பேச்சாளர் போல் பல விஷயங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்விஜயகாந்த்.

இந்த பேச்சின் மூலம் விஜயகாந்த் சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. சமூக சேவைசெய்யும் தனக்கு அரசியலில் ஈடுபட தகுதி இருக்கிறது என்பதையும், அதேநேரத்தில் எதிர்கால அரசியல்திட்டத்திற்கான அடிப்படை தான் இந்த சமூக சேவைகள் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லி புரிய வைத்துவிட்டார்.

அதோடு எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரோடு தனக்கு அரசியல் தொடர்பு இருந்தது, இன்னம் இருக்கிறதுஎன்பதையும் அவர் மேலோட்டமாக உணர்த்தியுள்ளார். எனவே அவரது அரசியல் பிரவேசம் வெகு தொலைவில்இல்லை என்பது மட்டும் உண்மை.

திண்டுக்கல் கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்தின் ரசிகர்கள், அவர் அறிமுகப்படுத்திய தனிக் கொடி பிடித்துவந்திருந்தனர். புதிய கொடியை பிப்ரவரி12ம் தேதி விஜயகாந்த் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X