ஹீரோ .. ஹீரோ ..
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஜயகாந்த் ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
நடிகர் சங்கத் தலைவராக தற்போது ராதாரவி இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெறஇருந்த சங்கத் தலைவர் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து நடிகர் விஜயகுமார்போட்டியிடவிருந்தார்.
இதனால், ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில்விஜயகுமார் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து சங்கத் தலைவர் தேர்தலுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
அதே நேரத்தில், சங்கத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலைகள் குறித்துஆய்வுநடத்த ஒரு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. அக்குழு அளிக்கும் ஆய்வின்முடிவை வைத்து தேர்தல் தேதியை நிர்ணயிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அக் குழு அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில், நடிகர் விஜயகாந்தைநடிகர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கானபணிகளில் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு, போட்டியில்இருந்து விலகுவதாகவும் ராதாரவி, விஜயகுமார் இருவரும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த்ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











