ஹீரோ .. ஹீரோ ..
நிருபர்களின் கடுப்பை நன்றாகச் "சம்பாதித்து" வைத்துள்ளார் கேப்டன்.
ரஜினியின் வளர்ச்சிக்கு எந்த அளவு பத்திரிக்கைகள் காரணமாக இருந்ததோ அந்த அளவுக்குவிஜயகாந்த்தின் வளர்ச்சிக்குப் பின்னணியிலும் பத்திரிக்கைகள் இருந்து வருகின்றன.
ரஜினிக்கு இணையாக அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது, அடுத்து இவர்தான் என்றுஉசுப்பலான செய்திகளைத் தருவது, எப்போது அரசியலில் குதிக்கப் போகிறார் என்று ஏற்றி விடுவதுஎன விஜயகாந்த்தைத் தூக்கு தூக்கு என்று தூக்கி விட்டது பத்திரிக்கைகள் மட்டுமே.
அப்படிச் செய்தது தவறோ என்று நினைக்கும் அளவுக்கு தற்போது விஜயகாந்த் நடந்துகொள்வதாகப் பத்திரிக்கையாளர்கள் புலம்புகின்றனர்.
சமீப காலமாகப் பத்திரிக்கை நிருபர்களையும், பத்திரிக்கையின் போக்குகளையும் பகிரங்கமாகக்கண்டித்து வருகிறார் விஜயகாந்த்.
பல நிருபர்களிடம் இவற்றை நேரடியாகவே அவர் கூறி வருவதால் விஜயகாந்த்திடம் பேட்டி என்றுபோகவே அவர்கள் தயங்கி வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு நிருபர்கள் கூட்டத்தில் அவர்பேசுகையில்,
ஒரு படத்தின் தரம் குறித்து பத்திரிக்கைகள் என்னதான் தாழ்த்தி எழுதினாலும் அந்தப் படம் நன்றாகஇருந்தால் ஓடத்தான் செய்கிறது.
எனவே பத்திரிக்கைகள் சொல்வதை மக்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவேஒரு படம் ஓடுவதும், ஓடாமல் இருப்பதும் பத்திரிக்கைகளால்தான் என்று இனிமேலும் கூறிக்கொண்டிருக்க முடியாது என்று விஜயகாந்த் நக்கலாகக் கூறினார்.
"அது சரிதான். ஒரு ஹீரோ என்னதான் நடித்தாலும், உருண்டாலும், புரண்டாலும் அந்தப் படம்ஓடுவதும், ஓடாததும் இயக்குநரின் கையில்தான் உள்ளது. இதையும் கேப்டன் புரிந்து கொள்ளவேண்டும்" என்று பதிலுக்குக் கிண்டல் அடித்தனர் நிருபர்கள்.
மேலும் தன் சொந்த வாழ்க்கையில் பத்திரிக்கைகள் அதிகமாகத் தலையிடுவது குறித்தும்நிருபர்களிடம் கண்டிப்புடன் பேசினார் விஜயகாந்த். தன்னுடைய பொறியியல் கல்லூரி குறித்துநிருபர்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதையும் ஜெயலலிதாவுக்கு அவர் ஜால்ரா அடிப்பது குறித்துகேள்வி கேட்பதையும் அவர் வெறுக்கிறாராம்.
மொத்தத்தில் கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகள் மீதும், நிருபர்கள் மீதும் கடும்காட்டத்துடனேயே இருக்கிறாராம் கேப்டன். இந்தக் காட்டத்தை "தென்னவன்" படத்தில்வெளிப்படுத்தி, மன அரிப்பை சொறிந்து கொள்ளவுள்ளாராம்.
சமுதாயத்திற்குப் பத்திரிக்கைகள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்பதுகுறித்து அதில் பல அறிவுரைகளை விஜயகாந்த் கொட்டவுள்ளாராம்.
இதையடுத்து விஜயகாந்த்திற்குப் பதிலடி கொடுக்க சில பத்திரிக்கைகளும் முடிவு செய்துள்ளன.இனி விஜயகாந்த் நடித்து வரும் படங்களுக்கு சரியான "பப்ளிசிட்டி" கொடுக்கப் போவதில்லைஎன்று அவை முடிவு செய்துள்ளன.
ரஜினிகாந்த்தை ஏற்றி ஏற்றி எழுதிய பத்திரிக்கைகளை கடைசியில் அவர் மதிக்காமலேயேவிட்டுவிட்டார். அதே அனுபவத்தை விஜயகாந்த் மூலம் பத்திரிக்கைகள் பெற விரும்பவில்லை.


Click it and Unblock the Notifications











