கொள்ளு தாத்தாவானார் விஜயகுமார்.. கர்ப்பமாக இருக்கும் பேத்தி தியா.. குவியும் வாழ்த்து!
சென்னை: பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா மகிழ்ச்சியான விஷயம் ஒன்றை சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக விஜயகுமார் இருக்கிறார். இவர் கதாநாயகனாக அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், சினிமாவில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜயகுமார்-மஞ்சுளா: நடிகர் விஜயகுமார் முத்துக்கண்ணுவை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருந்த போதும், நடிகை மஞ்சுளாவை சேர்ந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். இதையடுத்து, விஜயகுமார், மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர். இதில் ஒரே ஒரு ஆண் வாரிசு அருண்விஜய் மட்டும் தான். அருண்விஜய், சினிமாவில் டாப் நடிகராக இருக்கிறார்.

பேத்தி திருமணம்: விஜயகுமாரின் மகள் ஒருவரான அனிதாவிற்கு, தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில், விஜயகுமாரின் பேத்தி தியா அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு, தியாவிற்கு திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டில் திருமணம் தடபுடலாக நடைபெற்ற போதும், லண்டனில், தியாவின் திருமண வரவேற்பு நடைபெற்றது. அண்மையில் தியா, லண்டனில் வீடு வாங்கி கிரபிரவேஷம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

குட் நியூஸ்: இந்நிலையில் தியா தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கர்ப்பமாக இருக்கும் தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்கேன் எடுத்த போட்டோவை பகிர்ந்து இரண்டு, மூன்றானது,
எங்கள் குட்டி அற்புதம் விரைவில் வரும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











