கிறிஸ்துமசை டார்கெட் செய்யும் விஜய்ஆண்டனி… கெத்தா மிரட்ட வருகிறார் ‘தமிழரசன்‘
சென்னை : விஜய் ஆண்டனியின் தமிழரசன் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி தற்போது அக்னிசிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி நடித்து வரும் மற்றொரு திரைப்படமான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எதார்த்தம்
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என அனைத்திலும் நுழைந்து பட்டையை கிளப்பிக் கொண்டுஇருக்கிறார் விஜய் ஆண்டனி . இவரின் ப்ளஸேஇவரின் மிதமிஞ்சாத நடிப்புதான். மியூசிக்கில் ரணகளப்படுத்தும் விஜய் ஆண்டனி, நடிப்பில் எதார்த்தமாக இருப்பார்.

வித்தியாசமான கதை
விஜய்ஆண்டனியின் மாஸான குத்துப்பாட்டு கேட்டு மட்டுமே ஆட்டம் போட்டு வந்த ரசிகர்கள் திரையில் இவர் வந்தாலே விசிலடித்து மாஸ்காட்டி வருகின்றனர். இவர் கதாநாயகனாக நடித்த நான் தொடங்கி சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமானவை.

தனி ரசிகர் கூட்டம்
பிச்சைக்காரன் திரைப்படத்தின் கதையும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் விஜய் ஆண்டனிக்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தை சேர்ந்தது என்று செல்லலாம் குறிப்பாக பெண்கள் மனதில் இடம் பிடித்தார்.

மக்கள் மத்தியில்
விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியானத் திரைப்படம் கோடியில ஓருவன் இந்த திரைப்படத்திலும் அம்மாவின் கனவை நிறைவேற்றும் இளைஞனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.
Recommended Video

தமிழரசன்
இந்நிலையில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள தமிழரசன் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் கவுசல்யா ராணி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கவுள்ளார். திமிரு புடிச்சவன் திரைப்படத்தினை தொடர்ந்து இத்திரைப்படத்தில் போலீஸ் பாணியில் நடித்துள்ளார்விஜய் ஆன்டனி.


Click it and Unblock the Notifications











