»   »  பாங்காக் பறந்தார் விஜயகாந்த்

பாங்காக் பறந்தார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சபரி பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து தலைநகர்பாங்காக் சென்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான தர்மபுரி படத்தைத் தொடர்ந்து தற்போது சபரி என்ற படத்தில்நடித்து வருகிறார் விஜயகாந்த். அவரது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெளி வரப்போகும் 2வது படம் என்ற எதிர்பார்ப்பு சபரிக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் படமான தர்மபுரி சரியாக ஓடாததால் அப்செட் ஆன விஜயகாந்த், சபரி படத்தைசூப்பர் ஹிட் ஆக்க உறுதியாக உள்ளாராம். இந்த நிலையில் சபரி படப்பிடிப்புபாங்காக் நகரில் நடைபெறுகிறது.

இதற்காக சனிக்கிழமை அதிகாலை பாங்காக் கிளம்பிச் சென்றார் விஜயகாந்த்.அவருடன் நடிகைகள் ஜோதிர்மயி, மாளவிகா, இயக்குநர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்ஒய்.என்.முரளி, டான்ஸ் மாஸ்ட்ர் சின்னி சம்பத் மற்றும் நடனக் கலைஞர்களும்பாங்காக் சென்றுள்ளனர்.

Please Wait while comments are loading...