கேப்டனின் எம்.ஜி.ஆர்.
விஜயகாந்த் தனது அடுத்த படத்தின் பெயராக எம்.ஜி.ஆர். என்று சூட்டியுள்ளார். இதை திரைப்பட வர்த்தக சபையிலும் சட்டுப்புட்டென்று பதிவு செய்து வைத்து விட்டார்.
கருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரால் அன்புடன் அழைக்கப்படுகிறார் விஜயகாந்த். தனது அரசியல் வழிகாட்டியாகவும் எம்.ஜி.ஆரை வரித்துக் கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அரசியல் நடத்துகிறார்.இந்த நிலையில் தனது 150வது படத்துக்கு எம்.ஜி.ஆர். என்றே தலைவரின் பெயரை சூட்டியுள்ளார் விஜயகாந்த். சமீபத்தில் இந்தப் பெயரை திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்து விட்டார்.
ஒருவேளை இந்தப் பெயருக்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு வரலாம் என விஜயகாந்த் நினைக்கிறார். இதனால்தான் எம்.ஜி.ஆர். நடித்த ஹிட் படமான தலைவன் என்ற படத்தின் பெயரையும் பதிவு செய்து வைத்துள்ளாராம்.
சபரி படம் போண்டி ஆகிப் போனதால் பெரும் அப்செட் ஆனார் விஜயகாந்த். அது அவரது 149வது படமாகும். இந்த நிலையில், 150வது படத்தை படு விமரிசையாக, வெகு சிறப்பாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த்.
எம்.ஜி.ஆரை, வல்லரசு கொடுத்த மகாராஜன் இயக்கவுள்ளார். ஹீரோயின் உள்ளிட்ட பிற கலைஞர்களை விஜயகாந்த்தே முடிவு செய்யவுள்ளார்.
ஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படமான மதுரை வீரன் என்ற பெயரை வைத்து ஒரு படம் சமீபத்தில் வந்தது. இப்போது சரத்குமார் நம்நாடு என்ற பெயரில் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த வரிசையில் கருப்பு எம்.ஜி.ஆரும். சேருகிறார். சிவப்பு எம்.ஜி.ஆரைப் போல சாதிப்பாரா?


Click it and Unblock the Notifications











