ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நெறஞ்ச மனசு கை கொடுக்காத கவலையில் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்.

கஜேந்திரா கடுப்படித்து விட்ட நிலையில் அதிகம் எதிர்பார்த்த நெறஞ்ச மனசு படம் திருப்திகரமான வசூலைத் தரவில்லையாம்.இதனால் விஜயகாந்த் மனசு நெறையாமல் கவலையுடன் உள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டின்போது கண்டிப்பாக அரசியலில் குதிப்பேன், புதுக் கட்சி தொடங்குவேன், அதுவரை எனதுபடங்களில் அரசியலை ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்வேன் என்று தடாலடியாக பேசி வந்த விஜயகாந்த் தனது கஜேந்திராபடத்தை தானே திட்டமிட்டு தோல்வியைத் தழுவ வைத்தார்.

நெறஞ்ச மனசு படத்தை அவர் அதிகம் எதிர்பார்த்தார். இந்தப் படம் தனது அரசியல் அரங்கேற்றத்துக்கு கட்டியம் கூறுவதாகஅமையும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நெறஞ்ச மனசு கேப்டனுக்கு சோகத்தைக் கொடுத்துவிட்டது.

ரமணா, சின்னக் கவுண்டர் மாதிரி படங்களை எடுத்தால் ஆட்டோமேட்டிக்காக இமேஜ் உயரும்.

ஆனால் புருவத்தை தலை உச்சிக்கு உயர்த்தி இறக்குவது, கண்களை தாறுமாறாக உருட்டுவது, ரோஸ் பவுடரை ஓவராகப் போட்டுகலரைத் தூக்கிக் காட்டுவது என செயற்கைத் தனமான மேட்டர்களில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து நெறஞ்ச மனசு படத்தில்நடித்தார்.

விளைவு, ஏ, பி, சி என மூன்று செண்டர்களிலும் படம் படு சுமாராகத்தான் போய்க் கொண்டுள்ளதாம். போட்ட பணம்கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையுடன் விநியோகஸ்தர்கள் உள்ளார்களாம்.

இந்தத் தகவல்களால் கேப்டன் விரக்தி அடைந்துள்ளார்.

இப்படித் தொடர்ந்து தோல்விப் படங்களையேக் கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி அரசியலில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்என்ற கேள்விக்கணைகள் அவருக்குள் எழுந்துள்ளதாம்.

எனவே தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பாக ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளாராம்.

இதற்காக பல கதைகளைக் கேட்டிருக்கிறார். ஒன்றும் சரிப்படாத நிலையில், மகராஜனின் உதவியாளர் ஒருவர் கூறிய கதைகேப்டனை தலையாட்ட வைத்திருக்கிறது. சிப்பாய் என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்.

பெயரைப் பார்க்கும்போதே பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் புரட்டி, புரட்டி எடுத்து விட்டு, பக்கம் பக்கமாக வசனம்பேசப் போகிறார் என்பது தெரிகிறது.

ம்ஹூம், மனுஷர் 58 வயது வரைக்கும் தேசபக்தி சேவையிலிருந்து ரிடையர்மெண்ட் வாங்க மாட்டார் போலிருக்கிறதே!


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X