இப்படியும் ரசிகர்கள்... தமிழ்நாடு உருப்படும்... நடிகர் விஜயகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாடு நடைபெறவுள்ள மைதானம் ரசிகர்களின் புண்ணிய பூமியாகமாறியுள்ளது.வரும் செப்டம்பர் 14ம் தேதி மதுரை திருநகர் அருகே உள்ள தோப்பூரில் ரசிகர் மன்ற மாநில மாநாட்டை நடத்துகிறார்விஜயகாந்த். அன்றே தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.தோப்பூர் பகுதியில் 70 ஏக்கர் நிலம் மாநாடு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சமப்படுத்தி, சுத்தம்செய்யும் பணி தொடங்கியுள்ளது. புல்டோசர்கள் உதவியுடன் இந்தப் பணி நடக்கிறது. இந்த இடத்திற்கு இப்போதே ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தினமும் ஏராளமான ரசிகர்கள் வந்து மைதானத்தைப்பார்வையிட்டுச் செல்கிறார்கள்.சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப் போகிறார்களாம். அதிலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவாராம்.இதைக் கேள்விப்பட்டு மைதானத்தைப் பார்வையிட தினமும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர்.ரசிகர்களில் சிலர் கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்கின்றனர் (நாடுஉருப்படும்).ஏதோ, இது புண்ணிய ஸ்தலம் மாதிரியும் இவர்கள் ஏதோ பக்தர்கள் போலவும் நடந்து கொள்வதைப் பார்த்தால் மண்டைகாய்கிறது.மாநாட்டையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகளும் தொடங்கி விட்டன. மதுரை நகரின் பல்வேறு சுவர்களில் விஜயகாந்தின்படங்கள் வரையப்பட்டு மாநாடு குறித்த அறிவிப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. பல இடங்களில் விஜயகாந்தின்கட்-அவுட்களும் இப்போதே வைக்கப்பட்டுள்ளன.திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த்தின் ராட்சத பேனரும், கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் காமராஜர்,எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.இதற்கு ரசிகர்கள் புது விளக்கம் அளிக்கின்றனர். அன்புக்கு காமராஜர், அறத்துக்கு எம்.ஜி.ஆர், ஆற்றலுக்கு விஜயகாந்த் என்றுவியாக்கியானம் சொல்கின்றனர் விஜய்காந்தின் ரசிகர்கள்.அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வசனத்தையே போலவாம் இதுவும்.விஜய்காந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களின் நெத்தியில் மண்ணு..அப்ப, வந்துட்டா..?

By Staff

நடிகர் விஜயகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாடு நடைபெறவுள்ள மைதானம் ரசிகர்களின் புண்ணிய பூமியாகமாறியுள்ளது.

வரும் செப்டம்பர் 14ம் தேதி மதுரை திருநகர் அருகே உள்ள தோப்பூரில் ரசிகர் மன்ற மாநில மாநாட்டை நடத்துகிறார்விஜயகாந்த். அன்றே தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

தோப்பூர் பகுதியில் 70 ஏக்கர் நிலம் மாநாடு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சமப்படுத்தி, சுத்தம்செய்யும் பணி தொடங்கியுள்ளது. புல்டோசர்கள் உதவியுடன் இந்தப் பணி நடக்கிறது.

இந்த இடத்திற்கு இப்போதே ரசிகர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தினமும் ஏராளமான ரசிகர்கள் வந்து மைதானத்தைப்பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப் போகிறார்களாம். அதிலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவாராம்.

இதைக் கேள்விப்பட்டு மைதானத்தைப் பார்வையிட தினமும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர்.ரசிகர்களில் சிலர் கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்கின்றனர் (நாடுஉருப்படும்).

ஏதோ, இது புண்ணிய ஸ்தலம் மாதிரியும் இவர்கள் ஏதோ பக்தர்கள் போலவும் நடந்து கொள்வதைப் பார்த்தால் மண்டைகாய்கிறது.

மாநாட்டையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகளும் தொடங்கி விட்டன. மதுரை நகரின் பல்வேறு சுவர்களில் விஜயகாந்தின்படங்கள் வரையப்பட்டு மாநாடு குறித்த அறிவிப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. பல இடங்களில் விஜயகாந்தின்கட்-அவுட்களும் இப்போதே வைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த்தின் ராட்சத பேனரும், கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் காமராஜர்,எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு ரசிகர்கள் புது விளக்கம் அளிக்கின்றனர். அன்புக்கு காமராஜர், அறத்துக்கு எம்.ஜி.ஆர், ஆற்றலுக்கு விஜயகாந்த் என்றுவியாக்கியானம் சொல்கின்றனர் விஜய்காந்தின் ரசிகர்கள்.

அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வசனத்தையே போலவாம் இதுவும்.

விஜய்காந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களின் நெத்தியில் மண்ணு..

அப்ப, வந்துட்டா..?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X