»   »  சொத்தை வித்து மாநாடு: விஜயகாந்த் நான் யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை, எனது ஒரு சொத்தை விற்றுத்தான் மதுரை மாநாட்டை நடத்த செலவு செய்துவருகிறேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள மன்ற மாநில மாநாடு மற்றும் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாட்டுக்கானஏற்பாடுகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை செய்யாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துவருகிறார்கள். அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு பந்தல் அமைக்கும் பந்தல் சிவா தான் மதுரை மாநாட்டுக்கும் பந்தல் அமைக்கிறார்.இதுவரை தமிழகத்தில் எந்தக் கட்சியும் போடாத அளவுக்கு மிகப் பெரிய பந்தலைப் போடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்விஜய்காந்த். இதைத் தவிர மாநாட்டுக்கு வரச் சொல்லி பொது மக்களுக்கு அழைப்பு விடுக்க பல்வேறு ஊர்களில் பிரமாண்டமான கட்அவுட்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என கலக்கி வருகிறார். கல்யாண அழைப்பிதழ் போல வடிவமைக்கப்பட்டுள்ளமாநாட்டு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரையில் மாநாடு நடைபெறவுள்ள திருநகர் தோப்பூரில் அந்த அழைப்பிதழை பெரிய கட் அவுட்டாக செய்துவைத்திருக்கிறார்கள்.திருவிழா போல ரசிகர்கள் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விஜயகாந்த்துக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.மாநாட்டு செலவுகளை விஜய்காந்தின் மனைவி புஷ்பலதா தான் நேரடியாக ஹேண்டில் செய்கிறார். பணம் பஞ்சமில்லாமல்பாய்ந்து கொண்டிருக்கிறது. மாநாட்டுக்கான செலவு குறித்து விஜயகாந்த் கூறுகையில், யார் யாரெல்லாமோ எனக்கு நன்கொடைகள் தர முன் வந்தார்கள்.நான் நினைத்திருந்தால் அவற்றை வாங்கியிருக்கலாம். இதை விட ஆடம்பரமாக செலவு செய்திருக்கலாம். ஆனால் நான் ஒருபைசாவைக் கூட நன்கொடையாகப் பெறவில்லை. நன்கொடை வாங்கினால் நாளை நம்மிடம் எதையாவது எதிர்பார்ப்பார்கள். அதனால்தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.எனது சொத்து ஒன்றை விற்றுத்தான் மாநாட்டு செலவுகளை மேற்கொண்டு வருகிறேன். மாநாட்டை முதலில் திருச்சியில்தான் நடத்த நான் யோசித்தேன். ஆனால் மதுரையில் மாநாடு நடத்தினால் ராசியாக இருக்கும்.பல அரசியல் திருப்புமுனைகளைக் கொடுத்த ஊர் மதுரை என்று பலரும் கூறியதால் மதுரையில் நடத்த முடிவு செய்தேன்என்றார் விஜயகாந்த். இதற்கிடையே ஜவுளி நகரமான திருப்பூரில், விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடிகள், பேனர்கள் தயாரிப்புப் பணி படு தீவிரமாகநடந்து வருகிறது. சுமார் 25,000 கொடிகள், மதுரை மாநாடுக்காக தயாராகி வருகிறது. விஜயகாந்த் படம் பொறித்தபனியன்களும், பல வண்ண பேனர்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எங்கே போய் முடியுது பார்ப்போம்....

சொத்தை வித்து மாநாடு: விஜயகாந்த் நான் யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை, எனது ஒரு சொத்தை விற்றுத்தான் மதுரை மாநாட்டை நடத்த செலவு செய்துவருகிறேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள மன்ற மாநில மாநாடு மற்றும் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாட்டுக்கானஏற்பாடுகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை செய்யாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துவருகிறார்கள். அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு பந்தல் அமைக்கும் பந்தல் சிவா தான் மதுரை மாநாட்டுக்கும் பந்தல் அமைக்கிறார்.இதுவரை தமிழகத்தில் எந்தக் கட்சியும் போடாத அளவுக்கு மிகப் பெரிய பந்தலைப் போடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்விஜய்காந்த். இதைத் தவிர மாநாட்டுக்கு வரச் சொல்லி பொது மக்களுக்கு அழைப்பு விடுக்க பல்வேறு ஊர்களில் பிரமாண்டமான கட்அவுட்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என கலக்கி வருகிறார். கல்யாண அழைப்பிதழ் போல வடிவமைக்கப்பட்டுள்ளமாநாட்டு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரையில் மாநாடு நடைபெறவுள்ள திருநகர் தோப்பூரில் அந்த அழைப்பிதழை பெரிய கட் அவுட்டாக செய்துவைத்திருக்கிறார்கள்.திருவிழா போல ரசிகர்கள் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விஜயகாந்த்துக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.மாநாட்டு செலவுகளை விஜய்காந்தின் மனைவி புஷ்பலதா தான் நேரடியாக ஹேண்டில் செய்கிறார். பணம் பஞ்சமில்லாமல்பாய்ந்து கொண்டிருக்கிறது. மாநாட்டுக்கான செலவு குறித்து விஜயகாந்த் கூறுகையில், யார் யாரெல்லாமோ எனக்கு நன்கொடைகள் தர முன் வந்தார்கள்.நான் நினைத்திருந்தால் அவற்றை வாங்கியிருக்கலாம். இதை விட ஆடம்பரமாக செலவு செய்திருக்கலாம். ஆனால் நான் ஒருபைசாவைக் கூட நன்கொடையாகப் பெறவில்லை. நன்கொடை வாங்கினால் நாளை நம்மிடம் எதையாவது எதிர்பார்ப்பார்கள். அதனால்தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.எனது சொத்து ஒன்றை விற்றுத்தான் மாநாட்டு செலவுகளை மேற்கொண்டு வருகிறேன். மாநாட்டை முதலில் திருச்சியில்தான் நடத்த நான் யோசித்தேன். ஆனால் மதுரையில் மாநாடு நடத்தினால் ராசியாக இருக்கும்.பல அரசியல் திருப்புமுனைகளைக் கொடுத்த ஊர் மதுரை என்று பலரும் கூறியதால் மதுரையில் நடத்த முடிவு செய்தேன்என்றார் விஜயகாந்த். இதற்கிடையே ஜவுளி நகரமான திருப்பூரில், விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடிகள், பேனர்கள் தயாரிப்புப் பணி படு தீவிரமாகநடந்து வருகிறது. சுமார் 25,000 கொடிகள், மதுரை மாநாடுக்காக தயாராகி வருகிறது. விஜயகாந்த் படம் பொறித்தபனியன்களும், பல வண்ண பேனர்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எங்கே போய் முடியுது பார்ப்போம்....

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் யாரிடமும் நன்கொடை வாங்கவில்லை, எனது ஒரு சொத்தை விற்றுத்தான் மதுரை மாநாட்டை நடத்த செலவு செய்துவருகிறேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள மன்ற மாநில மாநாடு மற்றும் அரசியல் கட்சி அறிவிப்பு மாநாட்டுக்கானஏற்பாடுகளில் விஜயகாந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை செய்யாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துவருகிறார்கள்.

அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு பந்தல் அமைக்கும் பந்தல் சிவா தான் மதுரை மாநாட்டுக்கும் பந்தல் அமைக்கிறார்.இதுவரை தமிழகத்தில் எந்தக் கட்சியும் போடாத அளவுக்கு மிகப் பெரிய பந்தலைப் போடுமாறு உத்தரவிட்டிருக்கிறார்விஜய்காந்த்.

இதைத் தவிர மாநாட்டுக்கு வரச் சொல்லி பொது மக்களுக்கு அழைப்பு விடுக்க பல்வேறு ஊர்களில் பிரமாண்டமான கட்அவுட்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என கலக்கி வருகிறார். கல்யாண அழைப்பிதழ் போல வடிவமைக்கப்பட்டுள்ளமாநாட்டு அழைப்பிதழை வீடு வீடாக சென்று ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.


மதுரையில் மாநாடு நடைபெறவுள்ள திருநகர் தோப்பூரில் அந்த அழைப்பிதழை பெரிய கட் அவுட்டாக செய்துவைத்திருக்கிறார்கள்.

திருவிழா போல ரசிகர்கள் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது விஜயகாந்த்துக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.மாநாட்டு செலவுகளை விஜய்காந்தின் மனைவி புஷ்பலதா தான் நேரடியாக ஹேண்டில் செய்கிறார். பணம் பஞ்சமில்லாமல்பாய்ந்து கொண்டிருக்கிறது.

மாநாட்டுக்கான செலவு குறித்து விஜயகாந்த் கூறுகையில், யார் யாரெல்லாமோ எனக்கு நன்கொடைகள் தர முன் வந்தார்கள்.நான் நினைத்திருந்தால் அவற்றை வாங்கியிருக்கலாம். இதை விட ஆடம்பரமாக செலவு செய்திருக்கலாம். ஆனால் நான் ஒருபைசாவைக் கூட நன்கொடையாகப் பெறவில்லை.

நன்கொடை வாங்கினால் நாளை நம்மிடம் எதையாவது எதிர்பார்ப்பார்கள். அதனால்தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.எனது சொத்து ஒன்றை விற்றுத்தான் மாநாட்டு செலவுகளை மேற்கொண்டு வருகிறேன்.


மாநாட்டை முதலில் திருச்சியில்தான் நடத்த நான் யோசித்தேன். ஆனால் மதுரையில் மாநாடு நடத்தினால் ராசியாக இருக்கும்.பல அரசியல் திருப்புமுனைகளைக் கொடுத்த ஊர் மதுரை என்று பலரும் கூறியதால் மதுரையில் நடத்த முடிவு செய்தேன்என்றார் விஜயகாந்த்.

இதற்கிடையே ஜவுளி நகரமான திருப்பூரில், விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடிகள், பேனர்கள் தயாரிப்புப் பணி படு தீவிரமாகநடந்து வருகிறது. சுமார் 25,000 கொடிகள், மதுரை மாநாடுக்காக தயாராகி வருகிறது. விஜயகாந்த் படம் பொறித்தபனியன்களும், பல வண்ண பேனர்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எங்கே போய் முடியுது பார்ப்போம்....


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil