»   »  10 தொகுதிகளில் வெல்வாராம் விஜயகாந்த் நடிகர் மாதவனுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை தற்போது வேறு ரூபத்தில் திரும்பியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக விஜயகாந்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்களை கடுமையாக சாடியிருந்தார்.இதனால் கொந்தளித்துப் போன தயாரிப்பாளர்கள் சங்கம் மாதவன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால்அவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி ரெட் கார்டு போட்டனர். இதையடுத்து தன்னிலை விளக்கம் அளித்து நடிகர் விஜயகாந்த்துக்கு கடிதம் எழுதினார் மாதவன். இந்தக் கடிதத்தைதயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து மாதவன் மீதான தடையை நீக்கியதுதயாரிப்பாளர் சங்கம். லாக்கில்லாத தயாரிப்பாளர்கள்: இந் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜயகாந்த் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், சங்க நிர்வாகிகளிடையே பெரும் கோபத்தைஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தனது கடிதத்தில், நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர்கள், பஞ்சாயத்துப் பேசுவதற்கு லாயக்குஅற்றவர்கள். ஏ.எல்.அழகப்பன், எச்.முரளி போன்றவர்கள் பஞ்சாயத்துப் பேசுவதற்கே தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் உடனடியாக சங்க பொறுப்புகளிலிருந்துவிலக வேண்டும். மாதவனுக்கு தடை விதித்தது குறித்து பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து பெரிதுபடுத்திவிட்டார் ஏ.எல்.அழகப்பன். அவர் நடிகர்சங்கத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இந்தக் கடிதம் தயாரிப்பாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல இவர் யார், நடிகர்சங்கத்தில் செய்யும் கட்டப் பஞ்சாயத்தை இங்கேயும் கொண்டு வர விரும்புகிறாரா என்று அவர்கள் கோபமடைந்துள்ளனர். தகுயில்லாத விஜய்காந்த்: ஞாயிற்றுக்கிழமை காலை தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விஜயகாந்த்தின் கடிதம் குறித்துவிவாதிக்கப்பட்டது. பேசிய பலரும் விஜயகாந்தை கடுமையாக சாடிப் பேசினர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை, அதிகாரமும் இல்லை. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூட்டத்தில் கோரப்பட்டது. விஜயகாந்த்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த இந்த மோதலுக்கு சிம்பு விவகாரமும் ஒரு காரணம் என்றுகூறப்படுகிறது. சமீபத்தில், கூடுதல் சம்பளம் கேட்டு தொட்டி ஜெயா படத்திற்கு டப்பிங் பேச வர மாட்டேன் என்று சிம்பு கூற, கொதித்துப் போன தாணு,கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்தார். இதையடுத்து நடந்த பஞ்சாயத்துக்கு விஜயகாந்த்தைக் கூப்பிடாமல் அவருக்கு எதிரானவராக கருதப்படும் சரத்குமாரை வைத்துக் கூட்டம் நடந்தது.மேலும், தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் திமுகவைச் சேர்ந்தவர், சரத்குமாரும் திமுகவைச் சேர்ந்தவர். கலைப்புலி தாணு மதிமுகவைச் சேர்ந்தவர். விஜயகாந்தை வைகோவின் எதிரியாகவே மதிமுகவினர் பார்க்கின்றனர். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிம்புவிவகாரத்தில் பஞ்சாயத்து பேசியவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டப்படாதவர்கள். மேலும், இக்கூட்டத்தில் சிம்புவை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இது சிம்புவுடன் வந்த அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனையும் சேர்ந்து தான் ஏ.எல்.அழகப்பனுக்கு எதிராக விஜயகாந்த்தைத் திருப்பி விட்டுள்ளது. இந்தப் புதிய மோதல் எங்கு போய் முடியுமோ என்று ஒரு தரப்பு கவலையாகவும், ஆகா, ஆரம்பிச்சிருச்சுய்யா என்று இன்னொரு தரப்பு மகிழ்ச்சியாகவும்கவனிக்க ஆரம்பித்துள்ளது. மகளிர் அணி கூட்டத்தில்... இதற்கிடையே தனது அரசியல் நடவடிக்கைகளிலும் விஜயகாந்த் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்த் ரசிகர் மன்றத்திற்கான, சேலம் மண்டல மகளிர் அணியை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போதுரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார். நான் நினைத்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க முடியும். நன்றாக சம்பாதித்து, சுகமாக வாழ முடியும். ஆனால் பொதுச் சேவையில் தான் எனக்குசுகம். சிறு வயது முதலே அந்த உணர்வு எனது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இப்போதுஅரசியலுக்கு வருகிறேன். என் மன்றத்தினரும், குறிப்பாக படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரிடம் காணப்பட்ட ஆதரவைக் கருத்தில் கொண்டு தான், அவர்களது வேகத்தைப்பார்த்துத் தான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன். மனைவியும் காரணம்: எனது மனைவியும் எனது வெற்றிக்கு ஒரு காரணம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அந்த வகையில்,எனது வெற்றிக்கு எனது மனைவி தான் முக்கியக் காரணம். பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம், சாதிக்கலாம். நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எனது சொத்துக்கள் எல்லாம் நீங்கள் கொடுத்தது. அந்த சொத்தில் ஒன்றை விற்றுத் தான் இப்போது மாநாடு நடத்தப் போகிறேன். எனக்கு நீங்கள்கொடுத்தீர்கள். அதை விற்று உங்களுக்கே செலவழிக்கிறேன். எனது அரசியல் பிரவேசம் குறித்து நிறையப் பேர் கேலி செய்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது, மக்களைப்பற்றியும் தெரியாது. அவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், விளம்பரம் செய்யாதீர்கள் என்று நான் ரசிகர்களிடம் கூறியுள்ளேன். ஆனால் ஆர்வம் மிகுதியால் அவர்கள்அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களை என்னாலும் கட்டுபடுத்த முடியவில்லை. எனக்கு முன்னுதாரணம் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். எம்.ஜி.ஆருடன் என்னைப் ஒப்பிட்டுப் பேசுவதால், நான் அம்மாவிடம் பெட்டி வாங்கிவிட்டேன், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களிடம் பணத்தை வாங்கினால் பிறகு எதற்கு எனது சொத்தைவிற்க வேண்டும்? நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அதில் எப்படியும் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தனித்தே போட்டியிடுவோம். நாம் யார், நமது திட்டம் என்ன, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மதுரை மாநாட்டில் தெரிய வைப்போம் என்றார் விஜயகாந்த்.

10 தொகுதிகளில் வெல்வாராம் விஜயகாந்த் நடிகர் மாதவனுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை தற்போது வேறு ரூபத்தில் திரும்பியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக விஜயகாந்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்களை கடுமையாக சாடியிருந்தார்.இதனால் கொந்தளித்துப் போன தயாரிப்பாளர்கள் சங்கம் மாதவன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால்அவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி ரெட் கார்டு போட்டனர். இதையடுத்து தன்னிலை விளக்கம் அளித்து நடிகர் விஜயகாந்த்துக்கு கடிதம் எழுதினார் மாதவன். இந்தக் கடிதத்தைதயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து மாதவன் மீதான தடையை நீக்கியதுதயாரிப்பாளர் சங்கம். லாக்கில்லாத தயாரிப்பாளர்கள்: இந் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜயகாந்த் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், சங்க நிர்வாகிகளிடையே பெரும் கோபத்தைஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தனது கடிதத்தில், நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர்கள், பஞ்சாயத்துப் பேசுவதற்கு லாயக்குஅற்றவர்கள். ஏ.எல்.அழகப்பன், எச்.முரளி போன்றவர்கள் பஞ்சாயத்துப் பேசுவதற்கே தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் உடனடியாக சங்க பொறுப்புகளிலிருந்துவிலக வேண்டும். மாதவனுக்கு தடை விதித்தது குறித்து பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து பெரிதுபடுத்திவிட்டார் ஏ.எல்.அழகப்பன். அவர் நடிகர்சங்கத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இந்தக் கடிதம் தயாரிப்பாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல இவர் யார், நடிகர்சங்கத்தில் செய்யும் கட்டப் பஞ்சாயத்தை இங்கேயும் கொண்டு வர விரும்புகிறாரா என்று அவர்கள் கோபமடைந்துள்ளனர். தகுயில்லாத விஜய்காந்த்: ஞாயிற்றுக்கிழமை காலை தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விஜயகாந்த்தின் கடிதம் குறித்துவிவாதிக்கப்பட்டது. பேசிய பலரும் விஜயகாந்தை கடுமையாக சாடிப் பேசினர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை, அதிகாரமும் இல்லை. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூட்டத்தில் கோரப்பட்டது. விஜயகாந்த்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த இந்த மோதலுக்கு சிம்பு விவகாரமும் ஒரு காரணம் என்றுகூறப்படுகிறது. சமீபத்தில், கூடுதல் சம்பளம் கேட்டு தொட்டி ஜெயா படத்திற்கு டப்பிங் பேச வர மாட்டேன் என்று சிம்பு கூற, கொதித்துப் போன தாணு,கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்தார். இதையடுத்து நடந்த பஞ்சாயத்துக்கு விஜயகாந்த்தைக் கூப்பிடாமல் அவருக்கு எதிரானவராக கருதப்படும் சரத்குமாரை வைத்துக் கூட்டம் நடந்தது.மேலும், தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் திமுகவைச் சேர்ந்தவர், சரத்குமாரும் திமுகவைச் சேர்ந்தவர். கலைப்புலி தாணு மதிமுகவைச் சேர்ந்தவர். விஜயகாந்தை வைகோவின் எதிரியாகவே மதிமுகவினர் பார்க்கின்றனர். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிம்புவிவகாரத்தில் பஞ்சாயத்து பேசியவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டப்படாதவர்கள். மேலும், இக்கூட்டத்தில் சிம்புவை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இது சிம்புவுடன் வந்த அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனையும் சேர்ந்து தான் ஏ.எல்.அழகப்பனுக்கு எதிராக விஜயகாந்த்தைத் திருப்பி விட்டுள்ளது. இந்தப் புதிய மோதல் எங்கு போய் முடியுமோ என்று ஒரு தரப்பு கவலையாகவும், ஆகா, ஆரம்பிச்சிருச்சுய்யா என்று இன்னொரு தரப்பு மகிழ்ச்சியாகவும்கவனிக்க ஆரம்பித்துள்ளது. மகளிர் அணி கூட்டத்தில்... இதற்கிடையே தனது அரசியல் நடவடிக்கைகளிலும் விஜயகாந்த் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்த் ரசிகர் மன்றத்திற்கான, சேலம் மண்டல மகளிர் அணியை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போதுரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார். நான் நினைத்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க முடியும். நன்றாக சம்பாதித்து, சுகமாக வாழ முடியும். ஆனால் பொதுச் சேவையில் தான் எனக்குசுகம். சிறு வயது முதலே அந்த உணர்வு எனது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இப்போதுஅரசியலுக்கு வருகிறேன். என் மன்றத்தினரும், குறிப்பாக படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரிடம் காணப்பட்ட ஆதரவைக் கருத்தில் கொண்டு தான், அவர்களது வேகத்தைப்பார்த்துத் தான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன். மனைவியும் காரணம்: எனது மனைவியும் எனது வெற்றிக்கு ஒரு காரணம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அந்த வகையில்,எனது வெற்றிக்கு எனது மனைவி தான் முக்கியக் காரணம். பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம், சாதிக்கலாம். நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எனது சொத்துக்கள் எல்லாம் நீங்கள் கொடுத்தது. அந்த சொத்தில் ஒன்றை விற்றுத் தான் இப்போது மாநாடு நடத்தப் போகிறேன். எனக்கு நீங்கள்கொடுத்தீர்கள். அதை விற்று உங்களுக்கே செலவழிக்கிறேன். எனது அரசியல் பிரவேசம் குறித்து நிறையப் பேர் கேலி செய்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது, மக்களைப்பற்றியும் தெரியாது. அவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், விளம்பரம் செய்யாதீர்கள் என்று நான் ரசிகர்களிடம் கூறியுள்ளேன். ஆனால் ஆர்வம் மிகுதியால் அவர்கள்அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களை என்னாலும் கட்டுபடுத்த முடியவில்லை. எனக்கு முன்னுதாரணம் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். எம்.ஜி.ஆருடன் என்னைப் ஒப்பிட்டுப் பேசுவதால், நான் அம்மாவிடம் பெட்டி வாங்கிவிட்டேன், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களிடம் பணத்தை வாங்கினால் பிறகு எதற்கு எனது சொத்தைவிற்க வேண்டும்? நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அதில் எப்படியும் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தனித்தே போட்டியிடுவோம். நாம் யார், நமது திட்டம் என்ன, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மதுரை மாநாட்டில் தெரிய வைப்போம் என்றார் விஜயகாந்த்.

Subscribe to Oneindia Tamil

நடிகர் மாதவனுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை தற்போது வேறு ரூபத்தில் திரும்பியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக விஜயகாந்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.


சமீபத்தில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்களை கடுமையாக சாடியிருந்தார்.இதனால் கொந்தளித்துப் போன தயாரிப்பாளர்கள் சங்கம் மாதவன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால்அவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி ரெட் கார்டு போட்டனர்.

இதையடுத்து தன்னிலை விளக்கம் அளித்து நடிகர் விஜயகாந்த்துக்கு கடிதம் எழுதினார் மாதவன். இந்தக் கடிதத்தைதயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து மாதவன் மீதான தடையை நீக்கியதுதயாரிப்பாளர் சங்கம்.

லாக்கில்லாத தயாரிப்பாளர்கள்:

இந் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜயகாந்த் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், சங்க நிர்வாகிகளிடையே பெரும் கோபத்தைஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தனது கடிதத்தில், நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர்கள், பஞ்சாயத்துப் பேசுவதற்கு லாயக்குஅற்றவர்கள்.

ஏ.எல்.அழகப்பன், எச்.முரளி போன்றவர்கள் பஞ்சாயத்துப் பேசுவதற்கே தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் உடனடியாக சங்க பொறுப்புகளிலிருந்துவிலக வேண்டும். மாதவனுக்கு தடை விதித்தது குறித்து பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து பெரிதுபடுத்திவிட்டார் ஏ.எல்.அழகப்பன். அவர் நடிகர்சங்கத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

இந்தக் கடிதம் தயாரிப்பாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல இவர் யார், நடிகர்சங்கத்தில் செய்யும் கட்டப் பஞ்சாயத்தை இங்கேயும் கொண்டு வர விரும்புகிறாரா என்று அவர்கள் கோபமடைந்துள்ளனர்.

தகுயில்லாத விஜய்காந்த்:

ஞாயிற்றுக்கிழமை காலை தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விஜயகாந்த்தின் கடிதம் குறித்துவிவாதிக்கப்பட்டது. பேசிய பலரும் விஜயகாந்தை கடுமையாக சாடிப் பேசினர்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பதவி விலகச் சொல்ல விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை, அதிகாரமும் இல்லை. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூட்டத்தில் கோரப்பட்டது.

விஜயகாந்த்துக்கும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த இந்த மோதலுக்கு சிம்பு விவகாரமும் ஒரு காரணம் என்றுகூறப்படுகிறது. சமீபத்தில், கூடுதல் சம்பளம் கேட்டு தொட்டி ஜெயா படத்திற்கு டப்பிங் பேச வர மாட்டேன் என்று சிம்பு கூற, கொதித்துப் போன தாணு,கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்தார்.


இதையடுத்து நடந்த பஞ்சாயத்துக்கு விஜயகாந்த்தைக் கூப்பிடாமல் அவருக்கு எதிரானவராக கருதப்படும் சரத்குமாரை வைத்துக் கூட்டம் நடந்தது.மேலும், தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் திமுகவைச் சேர்ந்தவர், சரத்குமாரும் திமுகவைச் சேர்ந்தவர்.

கலைப்புலி தாணு மதிமுகவைச் சேர்ந்தவர். விஜயகாந்தை வைகோவின் எதிரியாகவே மதிமுகவினர் பார்க்கின்றனர். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிம்புவிவகாரத்தில் பஞ்சாயத்து பேசியவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டப்படாதவர்கள்.

மேலும், இக்கூட்டத்தில் சிம்புவை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இது சிம்புவுடன் வந்த அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனையும் சேர்ந்து தான் ஏ.எல்.அழகப்பனுக்கு எதிராக விஜயகாந்த்தைத் திருப்பி விட்டுள்ளது.

இந்தப் புதிய மோதல் எங்கு போய் முடியுமோ என்று ஒரு தரப்பு கவலையாகவும், ஆகா, ஆரம்பிச்சிருச்சுய்யா என்று இன்னொரு தரப்பு மகிழ்ச்சியாகவும்கவனிக்க ஆரம்பித்துள்ளது.

மகளிர் அணி கூட்டத்தில்...

இதற்கிடையே தனது அரசியல் நடவடிக்கைகளிலும் விஜயகாந்த் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜயகாந்த் ரசிகர் மன்றத்திற்கான, சேலம் மண்டல மகளிர் அணியை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போதுரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார்.

நான் நினைத்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க முடியும். நன்றாக சம்பாதித்து, சுகமாக வாழ முடியும். ஆனால் பொதுச் சேவையில் தான் எனக்குசுகம்.


சிறு வயது முதலே அந்த உணர்வு எனது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இப்போதுஅரசியலுக்கு வருகிறேன்.

என் மன்றத்தினரும், குறிப்பாக படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோரிடம் காணப்பட்ட ஆதரவைக் கருத்தில் கொண்டு தான், அவர்களது வேகத்தைப்பார்த்துத் தான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன்.

மனைவியும் காரணம்:

எனது மனைவியும் எனது வெற்றிக்கு ஒரு காரணம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அந்த வகையில்,எனது வெற்றிக்கு எனது மனைவி தான் முக்கியக் காரணம்.

பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம், சாதிக்கலாம். நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை.

எனது சொத்துக்கள் எல்லாம் நீங்கள் கொடுத்தது. அந்த சொத்தில் ஒன்றை விற்றுத் தான் இப்போது மாநாடு நடத்தப் போகிறேன். எனக்கு நீங்கள்கொடுத்தீர்கள். அதை விற்று உங்களுக்கே செலவழிக்கிறேன்.

எனது அரசியல் பிரவேசம் குறித்து நிறையப் பேர் கேலி செய்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது, மக்களைப்பற்றியும் தெரியாது. அவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள், விளம்பரம் செய்யாதீர்கள் என்று நான் ரசிகர்களிடம் கூறியுள்ளேன். ஆனால் ஆர்வம் மிகுதியால் அவர்கள்அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களை என்னாலும் கட்டுபடுத்த முடியவில்லை.

எனக்கு முன்னுதாரணம் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். எம்.ஜி.ஆருடன் என்னைப் ஒப்பிட்டுப் பேசுவதால், நான் அம்மாவிடம் பெட்டி வாங்கிவிட்டேன், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களிடம் பணத்தை வாங்கினால் பிறகு எதற்கு எனது சொத்தைவிற்க வேண்டும்?

நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அதில் எப்படியும் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தனித்தே போட்டியிடுவோம்.

நாம் யார், நமது திட்டம் என்ன, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மதுரை மாநாட்டில் தெரிய வைப்போம் என்றார் விஜயகாந்த்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil