twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேப்டனின் மாற்றம்! இனிமேல் வெளியார் படங்களில் நடிக்க மாட்டாராம் கேப்டன் விஜய்காந்த்.புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதோடு மேலும் சில முக்கியமுடிவுகளையும் எடுத்துள்ளார்.அதில் முக்கியமான முடிவு இனிமேல் சொந்தப் படங்களில் மட்டுமே நடிப்பது. விஜயகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும்படம் சுதேசி. இது இவரது சொந்தப் படைப்பு. நடித்து முடித்து வெளிவரக் காத்திருக்கும் படம் பேரரசு. இது காஜா மைதீன்தயாரிப்பில் உருவான படம். இதுவே வெளியார் ஒருவரின் படத்தில் விஜயகாந்த் நடிக்கும் கடைசிப் படமாகும்.சொந்தப் படம் தொடர்பாகவும் சில திட்டங்களை கேப்டன் வைத்துள்ளாராம். அதாவது இனிமேல் பாய்ந்து பாய்ந்து, மடங்கிமடங்கி சண்டை போடுவது, வாசல் படி இருந்தாலும் சுவரிலேயே நடந்து வீட்டுக்குள் வருவது போன்ற ஜாக்கிசான்வேலைகளை எல்லாம் இனிமேல் செய்யப் போவதில்லையாம்.மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும், சமுதாயத்திற்கு உருப்படியான யோசனைகளைக் கூறும் கதையம்சத்துடன் கூடியபடங்களை மட்டுமே தயாரித்து நடிக்கப் போகிறாராம் விஜயகாந்த். (இப்பவே ரீல் கணக்கில் வசனம் பேசும் விஜய்காந்த்இனிமேல் ரொம்ப பேசுவாருப்பா..)அரசுப் பதவிக்கு (முதல்வர் என்று படிக்க) வரும் நாள் வரை எக்காரணம் கொண்டும் படங்களில் நடிப்பதை நிறுத்தமாட்டாராம். இதற்கிடையே இதுவரை இல்லாத புது மாதிரியாக, வழக்கமாக வழிபடும் சாமியை கும்பிடாமல் இந்த முறைதனது பிறந்த நாளின்போது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் விஜயகாந்த்.விஜயகாந்த்தின் குலதெய்வத்தின் கோவில் மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே உள்ளது. அங்குஎப்போதாவது சென்று குடும்பத்துடன் வழிபடுவார் விஜயகாந்த். ஆனால் அவர் அடிக்கடி வழிபடும் தெய்வம்,இஷ்ட தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன்தான்.அதேபோல கோவை கோணியம்மனும் அவரது இஷ்ட கடவுளாகும்.எந்தக் காரியத்தில் இருந்தாலும் மீனாட்சி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டும், வழிபட்டும்தான் தனதுசெயலைத் தொடங்குவார். இந்த ஆண்டு விஜயகாந்த் முக்கியமான காலகட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.செப்டம்பர் மாதம் 14ம் தேதி அரசியலில் குதிக்கிறார்.இதனால் இந்த முறை தனது பிறந்த நாளையொட்டி கேப்டன் வித்தியாசமான ஒரு இடத்திற்கு குடும்பத்துடன்சென்றிருந்தார்.அது திருப்பதி!. திருப்பதிக்கு அதிகம் சென்றிராத விஜயகாந்த், இந்த பிறந்த நாளின்போது மனைவி பிரேமலதா,மகன்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் வணங்கினார்.

    By Staff
    |

    இனிமேல் வெளியார் படங்களில் நடிக்க மாட்டாராம் கேப்டன் விஜய்காந்த்.

    புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதோடு மேலும் சில முக்கியமுடிவுகளையும் எடுத்துள்ளார்.

    அதில் முக்கியமான முடிவு இனிமேல் சொந்தப் படங்களில் மட்டுமே நடிப்பது. விஜயகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும்படம் சுதேசி. இது இவரது சொந்தப் படைப்பு. நடித்து முடித்து வெளிவரக் காத்திருக்கும் படம் பேரரசு. இது காஜா மைதீன்தயாரிப்பில் உருவான படம். இதுவே வெளியார் ஒருவரின் படத்தில் விஜயகாந்த் நடிக்கும் கடைசிப் படமாகும்.

    சொந்தப் படம் தொடர்பாகவும் சில திட்டங்களை கேப்டன் வைத்துள்ளாராம். அதாவது இனிமேல் பாய்ந்து பாய்ந்து, மடங்கிமடங்கி சண்டை போடுவது, வாசல் படி இருந்தாலும் சுவரிலேயே நடந்து வீட்டுக்குள் வருவது போன்ற ஜாக்கிசான்வேலைகளை எல்லாம் இனிமேல் செய்யப் போவதில்லையாம்.

    மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும், சமுதாயத்திற்கு உருப்படியான யோசனைகளைக் கூறும் கதையம்சத்துடன் கூடியபடங்களை மட்டுமே தயாரித்து நடிக்கப் போகிறாராம் விஜயகாந்த். (இப்பவே ரீல் கணக்கில் வசனம் பேசும் விஜய்காந்த்இனிமேல் ரொம்ப பேசுவாருப்பா..)

    அரசுப் பதவிக்கு (முதல்வர் என்று படிக்க) வரும் நாள் வரை எக்காரணம் கொண்டும் படங்களில் நடிப்பதை நிறுத்தமாட்டாராம்.


    இதற்கிடையே இதுவரை இல்லாத புது மாதிரியாக, வழக்கமாக வழிபடும் சாமியை கும்பிடாமல் இந்த முறைதனது பிறந்த நாளின்போது திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் விஜயகாந்த்.

    விஜயகாந்த்தின் குலதெய்வத்தின் கோவில் மதுரை மாவட்டம் திருமங்கலத்துக்கு அருகே உள்ளது. அங்குஎப்போதாவது சென்று குடும்பத்துடன் வழிபடுவார் விஜயகாந்த். ஆனால் அவர் அடிக்கடி வழிபடும் தெய்வம்,இஷ்ட தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன்தான்.

    அதேபோல கோவை கோணியம்மனும் அவரது இஷ்ட கடவுளாகும்.

    எந்தக் காரியத்தில் இருந்தாலும் மீனாட்சி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டும், வழிபட்டும்தான் தனதுசெயலைத் தொடங்குவார். இந்த ஆண்டு விஜயகாந்த் முக்கியமான காலகட்டத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.செப்டம்பர் மாதம் 14ம் தேதி அரசியலில் குதிக்கிறார்.

    இதனால் இந்த முறை தனது பிறந்த நாளையொட்டி கேப்டன் வித்தியாசமான ஒரு இடத்திற்கு குடும்பத்துடன்சென்றிருந்தார்.

    அது திருப்பதி!. திருப்பதிக்கு அதிகம் சென்றிராத விஜயகாந்த், இந்த பிறந்த நாளின்போது மனைவி பிரேமலதா,மகன்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் வணங்கினார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X