ஹீரோ .. ஹீரோ ..
எங்கள் அண்ணா பெற்ற வெற்றியையடுத்து மீண்டும் ஒரு வெற்றி பெற்ற மலையாளப் படத்தை தமிழில்சொந்தமாக ரீமேக் செய்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.
அரசியல் ஆசையை மனதில் வைத்திருக்கும் விஜயகாந்த், அதற்கு முன்னதாக நான்கைந்து வெற்றிப்படங்களைக்கொடுத்து செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறார். வேற்று மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன்(இவரை யார் கூப்பிட்டா?) என்று பெருமையாகக் கூறி வரும் இவர் தற்போது வேற்று மொழிப் படங்களை ரீமேக்செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
முதலில் மலையாளத்தில் சக்கை போடு போட்ட குரோனிக் பேச்சிலர் (மம்முட்டி நடித்தது) படத்தை எங்கள்அண்ணா என்ற பெயரில் சொந்தமாக தயாரித்து லாபம் பார்த்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடிப்பை விடவடிவேலு, பாண்டியராஜன் ஆகியோரின் காமடிதான் இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது என்று சொல்லலாம்.
இதன் வெற்றியால் உற்சாகமடைந்த விஜயகாந்த், இப்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சிம்மாத்ரி படத்தின்ரீமேக்கான கஜேந்திராவில் நடித்து வருகிறார்.
இந் நிலையில் மம்முட்டி நடித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சேதுராமய்யர் சி.பி.ஐ என்ற படத்தின் மீதுவிஜய்காந்தின் கண் விழுந்துள்ளது.சிபிஐ அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்தப் படம் கேரளாவில் நன்றாகஓடிக் கொண்டிருக்கிறது.
தனக்குப் பொருத்தமான கதையாக இருப்பதால் இதை ரீமேக் செய்தால் என்ன என்று யோசித்து வருகிறாராம்விஜயகாந்த். விரைவில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி ரைட்ஸ் வாங்கும் உத்தேசம் உள்ளதாம்.
ஜோடி யாரு பேபி ஷாம்லியா?, கேப்டன்..


Click it and Unblock the Notifications











