»   »  மதுரை மாநாடு: விஜயகாந்த் தீவிர ஏற்பாடுகள்

மதுரை மாநாடு: விஜயகாந்த் தீவிர ஏற்பாடுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேச மாநாட்டிற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டன. நேற்று மதுரை வந்த அவர்,மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் நடைபெறும் ரசிகர் மன்ற மாநாட்டில் தனது அரசியல் பிரவேசம் குறித்துஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக நடிகர் விஜயகாந்த் கூறியிருந்தார். இதையடுத்து அவரது நடவடிக்கைகளை தமிழகஅரசியல்வாதிகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை பலர் வரவேற்றாலும், அவருக்கு பலமுனைகளில் இருந்து எதிர்ப்பும் வந்தது. இதை அவர்வெளிப்படையாகவே கூறினார்.

இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்புதமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே விஜயகாந்த் தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்னோடியாக ஊர் ஊராக சென்று ஏழைகளுக்கு நலத்திட்டஉதவிகளை வழங்கி வருகிறார். இதுமட்டுமல்லாமல் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுமாறும் தனது மன்றத்தினருக்குவிஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் மதுரை மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜயகாந்த் முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநாட்டிற்காகமதுரை திருப்பரங்குன்றம் அருகே மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோப்பூர் ஆஸ்டின்பட்டியில சுமார்70 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக விஜயகாந்த் நேற்று மதுரை வந்தார். இடத்தை பார்வையிட்ட பிறகு அவர்தனது மன்ற நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு விஜயகாந்த் சென்னை புறப்பட்டு சென்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil