»   »  நடிகர் சங்க தலைவர் பதவி: விலகுகிறார் விஜயகாந்த்?

நடிகர் சங்க தலைவர் பதவி: விலகுகிறார் விஜயகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரசியல் அரிதாரம் பூசப் போவதால் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக விஜயகாந்த் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் நடக்கப் போகும் மாநாட்டில் தனது அரசியல் பிரவேசம் குறித்துஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக விஜயகாந்த் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வகித்து வரும்நடிகர் சங்கத் தலைவர் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க ஆண்டுப் பேரவைக் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில்கூடவுள்ளது. இக் கூட்டத்தில் தனது பதவி குறித்த முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

பேரவைக் கூட்டம் தொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பில்,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 52வது ஆண்டு பேரவைக் கூட்டம் வரும் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு, சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகதெரிவித்துள்ளார்.

தனக்குப் பதில் சரத்குமாரை தலைவர் பதவிக்கு விஜயகாந்த் முன்மொழியலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவேதனக்குப் பின்னர் சரத்குமார் தான் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று விஜயகாந்த் கூறியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil