அதிமுகவிடமிருந்து மிரட்டலா? விஜயகாந்த் விளக்கம் எம்.ஜி.ஆர். பெயரை எனது ரசிகர்கள் பயன்படுத்தி வருவது குறித்து யாரிடமிருந்தும் மிரட்டல் வரவில்லை. மிரட்டலுக்குநாங்கள் பயப்படவும் மாட்டோம். எம்.ஜி.ஆர். பெயரை பயன்பபடுத்தக் கூடாது என்று எங்களை யாரும் தடுக்கவும் முடியாது என்று நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.மதுரை வந்த விஜயகாந்த், தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன்ஆலோசனையில் ஈடுபட்டார். செப்டம்பர் 14ம் தேதி திருநகரில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாடு மற்றும் கட்சி தொடக்கவிழா குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மன்ற ரசிகர்கள் வரைந்துள்ள சுவர் விளம்பரங்கள் மற்றும்தட்டிகள், பேனர்களில் எம்.ஜி.ஆர் படத்தை வரைந்துள்ளனர். இதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்.அனைவரின் அன்பையும் பெற்றவர், அமரர் ஆகி விட்டவர்.எனவே எம்.ஜி.ஆரின் படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு யாரையும் பின்பற்ற வேண்டியஅவசியம் இல்லை. ஆனால் ரசிகர்கள் தான் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்துகிறார்கள். இதை பெரிய தவறாக நான்நினைக்கவில்லை. வள்ளுவர் எழுதிய குறளைப் படியுங்கள், விவேகானந்தரைப் பின்பற்றுங்கள் என்று சொல்வதில்லையா, அதுபோலத் தான்எம்.ஜி.ஆரும். இதுவரை எங்களிடம் எம்.ஜி.ஆர் பெயரை, படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றுயாரும் சொல்லவில்லை. அப்படியே யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு பயமோ, பின்வாங்குதலோ காரணம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை குறித்து மாநாட்டின் போதுஅறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த்.

By Staff

எம்.ஜி.ஆர். பெயரை எனது ரசிகர்கள் பயன்படுத்தி வருவது குறித்து யாரிடமிருந்தும் மிரட்டல் வரவில்லை. மிரட்டலுக்குநாங்கள் பயப்படவும் மாட்டோம்.

எம்.ஜி.ஆர். பெயரை பயன்பபடுத்தக் கூடாது என்று எங்களை யாரும் தடுக்கவும் முடியாது என்று நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.

மதுரை வந்த விஜயகாந்த், தெப்பக்குளம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன்ஆலோசனையில் ஈடுபட்டார். செப்டம்பர் 14ம் தேதி திருநகரில் நடைபெறவுள்ள ரசிகர் மன்ற மாநாடு மற்றும் கட்சி தொடக்கவிழா குறித்த ஏற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மன்ற ரசிகர்கள் வரைந்துள்ள சுவர் விளம்பரங்கள் மற்றும்தட்டிகள், பேனர்களில் எம்.ஜி.ஆர் படத்தை வரைந்துள்ளனர். இதைத் தவறு என்று யாரும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர்.அனைவரின் அன்பையும் பெற்றவர், அமரர் ஆகி விட்டவர்.

எனவே எம்.ஜி.ஆரின் படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு யாரையும் பின்பற்ற வேண்டியஅவசியம் இல்லை. ஆனால் ரசிகர்கள் தான் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்துகிறார்கள். இதை பெரிய தவறாக நான்நினைக்கவில்லை.

வள்ளுவர் எழுதிய குறளைப் படியுங்கள், விவேகானந்தரைப் பின்பற்றுங்கள் என்று சொல்வதில்லையா, அதுபோலத் தான்எம்.ஜி.ஆரும். இதுவரை எங்களிடம் எம்.ஜி.ஆர் பெயரை, படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றுயாரும் சொல்லவில்லை.

அப்படியே யாராவது சொன்னால் அதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு பயமோ, பின்வாங்குதலோ காரணம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை குறித்து மாநாட்டின் போதுஅறிவிக்கப்படும் என்றார் விஜயகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X