கலக்கிய சின்னக் கவுண்டர்கள்! சென்னையில் நடந்த விஜயகாந்த் ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகள் பலரும்,சின்னக் கவுண்டர் பட விஜயகாந்த்தின் கெட்டப்பில் வந்திருந்தனர்.அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள விஜய்காந்தின் ரசிகர்கள் இப்போதே அரசியல்வாதிகள் கெட்-அப்புக்கு மாறஆரம்பித்துவிட்டனர். வெள்ளை கதர் சட்டை, மன்றத்தின் கொடிக் கரை கொண்ட வேட்டி, ஒரு துண்டு, வெள்ளைசெருப்பு என வெள்ளையும் ஜொள்ளையுமாக அலைய ஆரம்பித்துவிட்டனர்.சட்டைப் பையில் விஜய்காந்தின் படம் வெளியில் டிரான்ஸ்பரன்டாகத் தெரியும்படி வைத்துக் கொண்டுஅலைகின்றனர்.புதுக் கட்சி தொடர்பாக மண்டல வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையில் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில்,(நெடுஞ்சாலைத்துறை இதை இடிக்கவுள்ளதால் அதை கட்சித் தலைமையகமாக்கத் திட்டமிட்டுள்ளார்)தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாக சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல நிர்வாகிகளும் சின்னக் கவுண்டர் படத்தில் வரும்விஜயகாந்த் மாதிரி படிய வாரிய தலை, பளிச் வேட்டி, சட்டை, துண்டு சகிதம் வந்திருந்தனர்.அரசியல் புதுமுகங்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கே உரிய கெத்துடன் கோயம்பேடு பகுதியைகலக்கினர்.நிர்வாகிகள் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், புதிய அரசியல் கட்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், ரசிகர் மன்றமாநில மாநிாடு குறித்தும் விரிவாக விளக்கினார்.புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிந்தார்.கூட்டத்தில் பேசிய பல நிர்வாகிகளும் எம்ஜிஆர் படத்தை நாம் பயன்படுத்துவதால் அதிமுகவினர் எங்களைமிரட்டுகின்றனர் என கேப்டனிடம் புகார் கூறினர்.மேலும் விஜய்காந்த் கூட்டத்துக்கு வந்தபோதும் பேச எழுந்தபோதும் வருங்கால முதல்வர் வாழ்க என ரசிகர்கள்கோஷமிட்டனர்.

By Staff

சென்னையில் நடந்த விஜயகாந்த் ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகள் பலரும்,சின்னக் கவுண்டர் பட விஜயகாந்த்தின் கெட்டப்பில் வந்திருந்தனர்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள விஜய்காந்தின் ரசிகர்கள் இப்போதே அரசியல்வாதிகள் கெட்-அப்புக்கு மாறஆரம்பித்துவிட்டனர். வெள்ளை கதர் சட்டை, மன்றத்தின் கொடிக் கரை கொண்ட வேட்டி, ஒரு துண்டு, வெள்ளைசெருப்பு என வெள்ளையும் ஜொள்ளையுமாக அலைய ஆரம்பித்துவிட்டனர்.

சட்டைப் பையில் விஜய்காந்தின் படம் வெளியில் டிரான்ஸ்பரன்டாகத் தெரியும்படி வைத்துக் கொண்டுஅலைகின்றனர்.

புதுக் கட்சி தொடர்பாக மண்டல வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். மதுரை, கோவையைத் தொடர்ந்து சென்னையில் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில்,(நெடுஞ்சாலைத்துறை இதை இடிக்கவுள்ளதால் அதை கட்சித் தலைமையகமாக்கத் திட்டமிட்டுள்ளார்)தொடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாக சென்னை மண்டல ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல நிர்வாகிகளும் சின்னக் கவுண்டர் படத்தில் வரும்விஜயகாந்த் மாதிரி படிய வாரிய தலை, பளிச் வேட்டி, சட்டை, துண்டு சகிதம் வந்திருந்தனர்.

அரசியல் புதுமுகங்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கே உரிய கெத்துடன் கோயம்பேடு பகுதியைகலக்கினர்.

நிர்வாகிகள் மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், புதிய அரசியல் கட்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும், ரசிகர் மன்றமாநில மாநிாடு குறித்தும் விரிவாக விளக்கினார்.

புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய பல நிர்வாகிகளும் எம்ஜிஆர் படத்தை நாம் பயன்படுத்துவதால் அதிமுகவினர் எங்களைமிரட்டுகின்றனர் என கேப்டனிடம் புகார் கூறினர்.

மேலும் விஜய்காந்த் கூட்டத்துக்கு வந்தபோதும் பேச எழுந்தபோதும் வருங்கால முதல்வர் வாழ்க என ரசிகர்கள்கோஷமிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X