விஜய் கார் நம்பர் பிளேட்டை கவனிச்சீங்களா.. அட நண்பர் AK பெயர் இருக்கே.. குஷியான ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என்று பார்த்தால் இப்போதே அரசியல் பணிகளை இறங்கி செய்து வருகிறார். மற்ற கட்சிகளை சேர்ந்த பல பெரிய தலைகள் அப்படியே விஜய்யின் தவெக கட்சியில் அதிரடியாக இணையத் தொடங்கி விட்டனர். 2026 கப் முக்கியம் பிகிலு என விஜய் சும்மா ஒன்றும் சொல்லவில்லை என ரசிகர்கள் விஜய்யின் அதிரடி அரசியலை பார்த்து கூஸ்பம்ப்ஸ் ஆகியுள்ளனர்.

தொடர்ந்து கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அதிகளவில் விஜய் ஈடுபட்டு வருகிறார். ஜன நாயகன் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பையே கொஞ்ச மாதம் தள்ளி வைத்துவிட்டாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

vijay ajith kumar tvk

ஜன நாயகன் திரைப்படமே இந்த ஆண்டு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் வெளியாகும் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்யின் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. இன்று அவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த காரில் இடம்பெற்ற AK பெயரை பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகிவிட்டனர்.

CM நம்பர் பிளேட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் வரும் காரின் நம்பர் பிளேட்டில் CM என வெங்கட் பிரபு வைத்திருந்ததை நோட் செய்து ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், தற்போது நண்பரின் பெயர் விஜய் காரில் இருக்கே பாஸ் நோட் பண்ணுங்க என வீடியோக்கள் ஷேர் ஆகி வருகின்றனர்.

நம்பர் பிளேட்டில் AK: இந்நிலையில், இன்று கட்சியில் அடுத்தக்கட்ட உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வில் பங்கேற்க நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து நீல நிற காரில் வெளியே வந்தார். அந்த காரின் நம்பர் பிளேட்டில் AK என்கிற எழுத்துக்கள் இடம்பெற்றதை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் விஜய் எப்படி அந்த படத்துக்கு ஆதரவு கொடுக்கிறார் பாருங்க என்றும் சமீபத்தில், பத்ம பூஷன் வழங்கப்பட்ட நிலையில், அஜித் குமாருக்கு போன் பண்ணியே விஜய் வாழ்த்தியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தடுமாறி விழுந்த கேமரா மேன்: நடிகர் விஜய்யின் கார் வரும் போது அதை வீடியோ எடுத்துக் கொண்டு வந்த கேமராமேன் திடீரென தடுமாறி விழுந்ததும் அதை பார்த்து பதறிப்போன விஜய் சட்டென காரில் இருந்து இறங்கி வந்து அவரை நலம் விசாரித்துவிட்டு அதன் பின்னர் காரில் ஏறாமல் பாதி வழியில் இருந்து தொண்டர்களுடன் நடந்து சென்றது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன்: விசிகவில் இருந்த ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார். யூடியூபர் ராஜ்மோகனும் கொள்கைப் பரப்பு செயலாளராக பதவியேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக பிரபலங்கள் வெளியேறுவதும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர்கள் இணைவதும் விஜய்யின் பலம் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்து வருவதை காட்டுவதாக ரசிகர்கள் #தமிழகவெற்றிக்கழகம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X