சைலன்ட் மோடில் விஜய்.. எல்லாம் அதுக்குத்தானா?.. வயநாடு பக்கமும் போகல.. கோட் ஆடியோ லாஞ்சும் இல்லையா?

சென்னை: நடிகர் விஜய் கல்வி விருது விழாவுக்கு பிறகு மீண்டும் அமைதியோ அமைதி மோடுக்கே சென்று விட்டார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள விஜய் அடுத்ததாக கோட் படத்தின் ரிலீஸ் மற்றும் கட்சி மாநாடு என செம பிஸியாக உள்ளார். தவெக கட்சி மாநாட்டுக்கான இடத்தை ஃபிக்ஸ் செய்யவும் அவருக்கு தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்வி விருது விழாவின் முதல் கட்ட சந்திப்பின் போது விஜய் பேசியது திமுகவை எதிர்த்து பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர் 2வது சந்திப்பின் போது திமுகவின் நீட் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து பேசி அந்த விவகாரத்தை அப்படியே ஆஃப் செய்து விட்டார்.

GOAT Vijay

அதன் பின்னர், அரசியல் தொடர்பான எந்தவொரு கருத்தையும் அவ்வளவாக விஜய் பேசுவதில்லை. கோட் படத்தை முடித்து ரிலீஸுக்கு கொண்டு வரும் வேலையில் இருந்து வரும் நிலையில், வயநாடு நிலச்சரிவை கூட விஜய் கண்டுக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

வயநாடு பக்கமே போகல: கோட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்ற போது விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் அலைகடலென திரண்டு அவரது காரை எல்லாம் உடைக்கும் அளவுக்கு பாசத்தைக் காட்டினார்கள். ஆனால், வயநாடு நிலச்சரிவில் 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், சூர்யா, சியான் விக்ரம், மோகன்லால், கமல்ஹாசன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்தனர். ஆனால், விஜய் நிதியுதவி வழங்கியது போலவோ கேரள மக்களை நேரில் சென்று சந்தித்தது போலவோ எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

கோட் ஆடியோ லாஞ்ச் இல்லையா?: கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 3 பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவராத நிலையில், அந்த படத்திற்கு ஆடியோ லாஞ்ச் வேறு வைத்து யுவன் சங்கர் ராஜாவை பாராட்ட வேண்டுமா என விஜய் நினைத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன.

வெற்றி விழா தான்: விஜய் கோட் படத்தின் வெற்றி விழாவை வைத்துக் கொள்வோம் என்றும் லியோ படத்திற்கு பண்ணதை போலவே செய்து விடலாம் என்கிற முடிவுக்கு தற்போது வந்து விட்டதாக கூறுகின்றனர். கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றால் நிச்சயம் பஞ்சாயத்து ஏதாவது பெரிதாக வெடிக்கும் என்கிற அச்சம் காரணமாக சுமூகமாக படத்தின் டிரெய்லரை ஆன்லைனில் வெளியிட்டு நேரடியாக படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்கிற திட்டத்தில் தான் விஜய் இருப்பதாக கூறுகின்றனர்.

அனைத்து தியேட்டர்களிலும்: லியோ படத்திற்கு ஏற்பட்டதை போல டிக்கெட் டிமாண்ட் கோட் படத்திற்கு ஏற்படாத அளவுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கோட் படத்தை வெளியிடும் முயற்சியில் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இருப்பதாக கூறுகின்றனர். கோட் படத்துடன் எந்த படமும் போட்டிப் போடாத நிலையில், ஒட்டுமொத்த ஸ்க்ரீன்களிலும் விஜய் படத்தை ஓட வைத்து முதல் நாள் வசூலில் சாதனை படைக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X