Actor Prashanth: பிரஷாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அதிரடி போஸ்டரை வெளியிட்ட விஜய்யின் GOAT டீம்!

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்தக்கட்ட சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடக்க உள்ளது. இதற்காக துபாய் வழியாக விஜய் மாஸ்கோ சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் துபாய் விமான நிலையத்தில் தென்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு வாரங்கள் மாஸ்கோவில் நடக்க உள்ளதாகவும் அதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தன்னுடைய தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளார் விஜய். இந்தப் படத்தின் இயக்குனர் உள்ளிட்ட அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து விஜய் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக அவர் அரசியல் கட்சியை அறிவித்து அதையொட்டிய வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப் பெரிய கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன.

Vijay s GOAT movie team including director Venkat prabhu wishes Actor Prashanth on his birthday and poster released

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிகப் பெரிய வசூலை குவித்து வருகின்றன. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்த படங்கள் வசூலில் மாஸ் காட்டின. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். இந்த படத்தின் ஷூட்டிங் கேரளா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது பட குழுவினர் மாஸ்கோவில் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் துபாய் மூலமாக மாஸ்கோ சென்றதாக கூறப்படுகிறது.

மாஸ்கோவில் சூட்டிங்: விஜய் துபாய் விமான நிலையத்தில் தென்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன. தற்போது நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்களைத் தொடர்ந்து சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் நடிகர் விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போதே அவர் தன்னுடைய உறுதியான இந்த தீர்மானம் குறித்து அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் GOAT படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.

Vijay s GOAT movie team including director Venkat prabhu wishes Actor Prashanth on his birthday and poster released

நடிகர் பிரஷாந்த்: இந்த படத்தில் 90களின் முன்னணி நாயகன் பிரசாந்த் விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார். அவருக்கு இந்த படத்தில் என்ன மாதிரியான கேரக்டர் அமைந்துள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் மட்டும் இல்லாமல் பிரபு தேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முக்கியமான கேரக்டர்களை கொடுத்து வெங்கட் பிரபு இயக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

பிரஷாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் பிரஷாந்தின் பிறந்த நாளை ஒட்டி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவரது கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, பிரசாத்திற்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் பிரஷாந்த் மிகப்பெரிய துப்பாக்கியுடன் காணப்படுகிறார். இதனால் இந்த படத்தில் அவரது கேரக்டருக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X