அது உங்களுக்கு சொன்னா புரியாது சார்.. மீண்டும் துப்பாக்கி ஜகதீஷ் லுக்கில் விஜய்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் களத்தில் நுழைந்து தவெக தலைவராக உருவெடுத்துள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜனநாயகன் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவருடைய புதிய லுக் அட்டகாசமாக உள்ளதாக "அது உங்களுக்கு சொன்னா புரியாது சார்" என டிராகன் படத்தின் காட்சியையும் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமான இஃப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. அதில், விஜய் கலந்துக் கொண்ட காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இஸ்லாமிய தோழர்களுடன் இணைந்து நோன்பு திறக்கும் விழாவில் விஜய் பங்கேற்ற காட்சிகளும் வீடியோக்களும் அவரை காண ஆண்கள், பெண்கள் என பலர் திரண்டது எல்லாமே டிரெண்டாகி வருகிறது.

Vijay Jana Nayagan TVK Vijay

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் நேரடியாக திமுக அரசை 2026ம் ஆண்டு அப்புறப்படுத்துவோம் என்றும் மகளிருக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது தான் என் கடமை என்றும் விஜய் பேசியுள்ளார்.

விஜய்க்கு எகிறும் வெயிட்டேஜ்: அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய விஜய்க்கு எதிராக குவியும் விமர்சனங்களே அவருக்கான வெயிட்டேஜை மக்கள் மத்தியில் பெற்றுத் தருவதாக கூறுகின்றனர். ரமலான் புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து வரும் நிலையில், அவர்களை கவர் செய்யும் விதமாக நேற்று நடைபெற்ற இஃப்தார் விழாவில் விஜய் தொப்பி மற்றும் லுங்கி அணிந்துக் கொண்டு கலந்துக்கொண்டது இஸ்லாமிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் நல்லா நடிக்கிறாரு என்றும் அரசியல்வாதிகள் ரமலான் மாதம் வந்துவிட்டாலே பாய் பாய் என வந்துவிடுவார்கள் என்றும் பரிதாபங்கள் காமெடி சீன்களை எல்லாம் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ட்ரோல்களுக்கு அஞ்சாத விஜய்: சினிமாவில் இருக்கும் போதே விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களும் ரஜினிகாந்த் ரசிகர்களும் பண்ணாத ட்ரோல்களா என்றும் அதை விட விஜய் ரசிகர்கள் மற்ற நடிகர்களை செய்யாத ட்ரோல்களா? அனைத்தையும் பார்த்துவிட்டு அரசியல் களத்தில் விஜய் குதித்துள்ள நிலையில், சோஷியல் மீடியா ட்ரோல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் அதெல்லாம் ஃப்ரீ புரமோஷனாகவே கருதி அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார்.

துப்பாக்கி ஓல்டர் வெர்ஷன்: பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து வருகிறார் என சில தகவல்கள் வெளியான நிலையில், ஜன நாயகன் படத்தின் போஸ்டருக்குப் பிறகு எச். வினோத் வேறு ஒரு கதையை உருவாக்கி வரக்கூடும் என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், துப்பாக்கி படத்தில் வரும் ஜகதீஷ் கதாபாத்திரத்தின் ஓல்டர் வெர்ஷனாக இன்று விஜய் வெளியிட்ட மகளிர் தின வாழ்த்து வீடியோவில் இருந்ததை பார்த்த ரசிகர்கள் ஜனநாயகன் ஷூட்டிங் பிரேக்கில் இருந்து தான் விஜய் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்றும் எச். வினோத் தரமான சம்பவத்தை செய்து வருகிறார் என்றும் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வருமா?: ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியப் போகிறது என்றும் விஜய் அரசியல் பயணத்துக்காக தள்ளிப்போட்டு வருகிறார் என்றும் முரண்பட்ட தகவல்கள் வருவதால் ஜன நாயகன் படம் இந்த ஆண்டே வெளியாகுமா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X