இந்த வாரமே ஜன நாயகன் வெளியாகாதா?.. சுத்த விடும் தணிக்கை குழு.. விஜய் படத்துக்கு நாளை(ய) மறுநாள் தீர்ப்பு
சென்னை: ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் எப்படியும் ரிலீஸ் ஆகிவிடும் என பெரும் நம்பிக்கையுடன் இருந்த தளபதி ரசிகர்கள் தற்போது நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பு வைத்த வாதம் காரணமாக ரொம்பவே டென்ஷன் ஆகியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தணிக்கை குழு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிதாக 5 பேர் கொண்ட ரிவைசிங் கமிட்டி ஜன நாயகன் படத்தை பார்த்து சான்றிதழை தரலாமா? வேண்டாமா? என்கிற முடிவை எடுப்பார்கள். தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை என ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
பகவந்த் கேசரி ரீமேக் படத்துக்கு சிக்கல்: ராணுவத்தில் பெண்களை சேர்க்க வேண்டும் என்றும் பெண்களை புலியாக வளர்க்க வேண்டும் என்கிற கதையை கொண்ட பகவந்த் கேசரி படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், விஜய் தனது கடைசி படமாக இந்த படத்தை ரீமேக் செய்து நடித்துள்ள நிலையில், படத்தில் ராணூவ அடையாளங்கள் எந்தவொரு நிபுணர்களின் மேற்பார்வையுடன் வைக்கப்படவில்லை என்கிற வாதத்தையும் தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போதைக்கு நோ சென்சார்: ஜன நாயகன் படத்துக்கு இன்று சான்றிதழ் கிடைத்துவிடும். படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஜன நாயகன் படத்தை மறு சீராய்வு குழுவுக்கு அனுப்பி படத்தை மீண்டும் பார்த்து தணிக்கை செய்யப் போவதாகவும் அதற்கு முழு உரிமையும் தணிக்கை வாரியத்துக்கு உள்ளதாக வாதாடியுள்ளனர்.
கேவிஎன் வழக்கறிஞர் பரபரப்பு வாதம்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜாராகியுள்ள வழக்கறிஞர் பராசரன் 5 பேர் கொண்ட வழக்கில் ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது 4:1 தான். கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பதால் மிகப்பெரிஅய் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்றும் தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் தர ஒப்புதல் தந்த நிலையில், இப்படி செய்வது தணிக்கை குழுவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் வாதிட்டுள்ளார்.
நாளை மறுநாள் தீர்ப்பு: ஆனால் தணிக்கை குழுவின் டைம் லைனை கடைபிடித்தாக வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் படம் இந்த வாரம் வெளியாகுமா? அல்லது தை பிறந்த பின்னர் தான் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











