விஜய் என்னத்த மக்கள் பிரச்னையை பார்க்கப்போறாரு.. முதல்ல ஜனநாயகன் சம்பள பாக்கி பிரச்னையே தீரலயாம்?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன. அதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட்டு வருவது கிடையாதாம். தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் படத்தில் வேலை பார்த்து வரும் சினிமா தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பது தான் காரணம் என்கின்றனர்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ஜனநாயகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சம்பள பாக்கி காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய் சினிமா மற்றும் அரசியல் என இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்து வருகிறார். மக்கள் பிரச்சனையை தீர்க்க அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், தனது படத்தில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சனையை முதலில் விஜய் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறுத்தம்: நடிகர் விஜய் நடித்தவரும் ஜனநாயகம் படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், அரசியல் காலமாக அழுத்தம் தரப்படுகிறது என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற ஐடி ரெய்டு காரணமாகத்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்களுக்கு 24 நாட்களுக்கான சம்பள பாக்கி நிலுவையில் இருப்பதால், சினிமா தொழிலாளர் சங்கம் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் கவனிப்பாரா?: ஜனநாயகன் படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு அதிகபட்சமாக 275 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமிதாப் பச்சன், ஷாருக்கான் தொடர்ந்து அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரி செலுத்தும் உச்ச நடிகராக விஜய் மாறி உள்ளார். இந்நிலையில், தனது படத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் இருக்கும் பிரச்சனையை விஜய் கவனிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அடுத்த ஆண்டு தான் ரிலீஸ்: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் படம் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஜனநாயகன் பட குழுவும் சாப்பிட்டு விட்டு சாயங்காலம் தேடுவோம் என்கிற ரீதியில் தான் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறுகின்றனர். சம்பள வாக்கிய காலமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டாலும், பெரிதாக பல குழு கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம் அடுத்த ஆண்டு படம் தள்ளிப்போனது தான் என்கின்றனர்.
யஷ் படத்துக்கும் சிக்கல்: கேவிஎன் தயாரிப்பில் உருவாகி வரும் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்துக்கும் இதே சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக கடுமையான கிடுக்குபிடிகள் திடீரென மத்தியில் இருந்து கிளம்பிய அழுத்தம் தான் இத்தனைக்கும் காரணம் என்றும் கூறுகின்றனர். இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பதால் அந்த நிறுவனம் பிரச்னையை விரைவில் சரிசெய்துவிடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











