கில்லி ரீ ரிலீஸ்லையே ரெக்கார்ட்.. ஜனநாயகன் லீக் ஆனாலும், வசூல் சம்பவம் பண்ணும்.. ரசிகர்கள் உறுதி!

சென்னை: தேர்தல் முடியும் வரை ஜன நாயகன் படம் வெளியாகாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஜன நாயகன் மொத்த படமும் ஆன்லைனில் லீக்காகி டிவிடி பிரிண்ட் எல்லாம் போட்டு விற்பனை செய்யும் அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.

ஜனநாயகன் படத்தை திருட்டுத் தனமாக பார்த்தாலோ, அதை பதிவிறக்கம் செய்தாலோ, அதை ஷேர் செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை பாயும் என கண்ணு கெட்டப்பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல எடிட்டிங் வெர்ஷனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் கேவிஎன் புலம்புகிறது என ஏகப்பட்ட மீம்கள் ஜனநாயகன் பட லீக்கான காட்சிகளை வைத்தே கலாய்த்து வருகின்றனர்.

Vijay s Jana Nayagan will create Box Office victory even after leaked

எது எப்படி இருந்தாலும், ஆல் ஏரியாவிலும் எங்கய்யா கில்லிடா, கில்லி ரீ ரிலீஸ் படத்தையே 20 வருஷம் கழித்து வெளியாகியும் தியேட்டரில் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு வச்சோம். இப்போ ஜனநாயகன் மொத்தமும் லீக் ஆனாலும், லீக் ரெக்கார்டு வைப்போம் என விஜய் ரசிகர்கள் உறுதியான நம்பிக்கையுடன் கெத்துக் காட்டி வருகின்றனர்.

விஜய்க்கு சாதகமா? பாதகமா?: ஜனநாயகன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் வரை ஓடிடியில் கூட படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என உறுதியாக விஜய் இருந்து வரும் நிலையில், இப்படி அவரது டீமே அதை லீக் செய்தது என்று சொல்வது எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை தான். பொங்கலுக்கே ஓவர்சீஸில் 60 கோடிக்கு டிக்கெட் புக்கிங் ஆன நிலையில், இந்தியாவிலும் ஓடிடியில் 150 கோடிக்கு படத்தை ரிலீஸ் பண்ணியிருந்தால் கூட 200 கோடிக்கும் மேல் லாபத்தை படம் பார்த்திருக்கும் என்கின்றனர். இதெல்லாம் இப்போ தவிடுபொடியாகி உள்ள நிலையில், விஜய்யை மொத்தமாக முடித்துக் கட்ட அரசியல் சூழ்ச்சி நடப்பதாக தவெகவினர் கூறுகின்றனர்.

கில்லி ரீ ரிலீஸ் ரெக்கார்ட்: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் படையப்பா, அஜித் குமாரின் மங்காத்தா உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆனாலும், இன்னமும் 2024ல் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் ஆகி 30 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டிய சாதனையை மற்ற எந்தவொரு தமிழ் படமும் முறியடிக்கவில்லை என்கின்றனர்.

ஜனநாயகன் வசூல் வேட்டை நடத்தும்: அதே போல தேர்தல் முடிந்து சென்சார் சான்றிதழ் வாங்கி அதிகபட்சம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளியானால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அந்த படத்தை பார்த்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு வைப்பார்கள் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகே ஜனநாயகன் படம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். படத்தை பார்த்த விஷமிகள் படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களையும் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X