Vijay: விமான நிலையத்தில் விஜய்க்காக காத்திருக்கும் கேரள ஃபேன்ஸ்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?

திருவனந்தபுரம்: விஜய்யின் The greatest of all time படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இன்றைய தினம் விஜய் கேரளா செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக அவரது ஷூட்டிங் நடக்கும் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பேனர்கள் உள்ளிட்டவற்றை வைத்து கேரளா ரசிகர்கள் அவரது வருகைக்காக காத்திருக்கின்றனர்.

விஜய் தனது அரசியல் என்ட்ரியை கடந்து சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் இந்த GOAT மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து அவர் சினிமாவிலிருந்து விலகவுள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அடுத்தடுத்து விஜய்யின் இந்த படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. GOAT படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய நிலையில் அடுத்த மாதத்துடன் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

Vijay s Kerana fans waiting at Airport for his arrival

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக படக்குழுவினர் முன்னதாக கேரளா சென்றுள்ளனர். இதனிடையே இன்றைய தினம் நடிகர் விஜய், கேரளா செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்க்கு கேரளாவில் வெறித்தனமான ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். அவரது படம் கேரளாவில் ரிலீசாகும் நேரங்களில் மற்ற படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் சூழல் அங்கு காணப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கு கேரளாவில் வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

கேரள ரசிகர்கள் காத்திருப்பு: முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்பு காவலன் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் கேரளா சென்றிருந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. இதற்காக சூட்டிங் நடக்க உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் விஜய்யின் பேனர்களை அதிகமாக வைத்து மற்றும் விஜய்யை போலவே பைக் ஊர்வலத்தை நடத்தி கேரள ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் அவரது வருகைக்காக கேரள ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் சூட்டிங்: இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளன. கேரளாவில் தொடர்ந்து 15 நாட்கள் இந்த ஷூட்டிங் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக மாஸ்கோ செல்ல உள்ளனர். அங்கும் தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளது. இதையடுத்து அடுத்த மாதத்துடன் GOAT படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 பட அறிவிப்பு: இதனிடையே இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் அவரது தளபதி 69 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த படத்தின் அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். அந்த படம் விஜய்யின் கடைசி படமாக உள்ள நிலையில் இந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. தளபதி69 படத்தின் டைரக்டர் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X