Actor Vijay: சிக்கலில் விஜய்யின் திருமண மண்டபங்கள்?.. காப்பாற்ற மாஸ்டர் பிளான்!
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரிதான் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய கட்சியை விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பிற்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டில் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவரும் சூழலில், தன்னை பார்க்க வரும் ரசிகர்களை தினந்தோறும் சந்தித்து வருகிறார். இந்தப் படத்தை தொடாந்து தளபதி 69 படத்தில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அரசியல் கனவு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு பொதுநலப் பணிகளை மேற்கொண்டுவந்த விஜய், நேரடியாக அரசியலில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தேவையான பலவற்றை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றி கழகம் மூலமாக 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
The greatest of all time: இந்நிலையில் தற்போது The greatest of all time படத்தில் நடித்து வருகிறார் விஜய். படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில் மகன் கேரக்டருக்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை இளமையாக காட்ட படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ள விஜய், இந்தப் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யின் திருமண மண்டபங்கள்: விஜய் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது நடித்து வந்தார். கடந்த ஆண்டில் மட்டுமே இவரது நடிப்பில் வாரிசு மற்றும் லியோ என அடுத்தடுத்து இரு படங்கள் வெளியாகின. ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் 120 கோடி முதல் 200 கோடி வரை அவர் சம்பளமாக பெற்று வருகிறார். இந்நிலையில் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் விஜய்க்கு சொந்தமான பல திருமண மண்டபங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த மண்டபங்களுக்கு முறையான பத்திர பதிவு உள்ளதா மாநகரட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா, வேறெதுவும் வில்லங்கங்கள் உள்ளதா என்று குடைச்சல் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கைமாற்றிய விஜய்: இதனிடையே சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றை தயாரிப்பாளர் லலித்திடம் 8 லட்சம் மாத வாடகைக்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விஜய் வாடகைக்கு விட்டுள்ளாராம். இதேபோல தன்னுடைய மகன், மனைவி மற்றும் அம்மா ஆகியோர் பெயரில் உள்ள இந்த திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைக்க 12 லட்சம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு அவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபம் தற்போது ரிலையன்ஸ் ட்ரெண்ட்சாக மாறியுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டாக மாற்றம்: இதேபோல சென்னையில் உள்ள சில மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சூப்பர் மார்க்கெட்டாக வைத்துக் கொள்ள மாத வாடகைக்கு ஒப்பந்தம் போடவும் விஜய் யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. விஜய் நீண்ட நாட்களாகவே தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியையும் அறிவித்து விட்டார். இந்நிலையில் அவரது திருமண மண்டபங்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. சென்னை வடபழனியில் அடுத்தடுத்த திருமண மண்டபங்கள், போரூரில் திருமண மண்டபம் என வெளிப்படையாகவே விஜய்யின் திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











