Thalapathy 69: தளபதி 69 படத்துக்கு விஜய்க்கு இத்தனை கோடி சம்பளமா?.. கோட் அடிவாங்கியும் திருந்தலையே?
சென்னை:சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கோட் திரைப்படம் முதல் நாளே 126 கோடி ரூபாய் வசூல் செய்ய காரணமே தளபதி விஜய்யின் மார்க்கெட் தான். சியான் விக்ரமின் தங்கலான், தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்கள் 100 கோடி வசூலை பெறவே கடும் போராட்டத்தை சந்தித்தன.
முதல் நாளே கோட் திரைப்படம் 126 கோடி ரூபாய் வசூலை பெற்ற நிலையில், தொடர்ந்து அதே வேகத்தில் படம் ஓடியிருந்தால் இந்நேரம் ஜவான், சலார் படங்களை போல 500 கோடி வசூலை கடந்திருக்கும். ஆனால், 4 நாட்களில் 288 கோடி வசூலை அள்ளிய கோட் திரைப்படம் வார நாட்களில் பெரும் சரிவை சந்தித்து வருவதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஏஜிஎஸ் பெரும் பொருட்செலவில் வெங்கட் பிரபு மற்றும் விஜய்யை நம்பி தயாரித்த கோட் திரைப்படம் அதிகபட்சமாகவே 500 கோடி வசூலை தான் பெறும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தளபதி 69 படத்தில் விஜய் வாங்கப் போகும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பளம் 200 கோடி: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மேலும், அதில் பாதி நடிகர் விஜய்க்கு சம்பளமாக சென்றுள்ளது. லியோ படத்துக்கு சுமார் 150 கோடி சம்பளம் வாங்கிய விஜய் கோட் படத்துக்கு 200 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தினார்.
லியோ வசூல் வராது: சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லியோ படம் அதிகபட்சமாக 600 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது. 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கோட் திரைப்படம் 700 முதல் 800 கோடி வசூல் வந்திருந்தால் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியிருக்கும். ஆனால், இதுவரை 325 கோடி ரூபாய் தான் கோட் படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். 500 கோடி வசூலை இந்த வாரம் இறுதியில் கோட் ஓடி வசூல் செய்தால் தான் அள்ள முடியும் என்றும் ஆனால், அதுவும் சந்தேகம் தான் என்று கூறுகின்றனர்.
தளபதி 69 சம்பளம்: ஆனால், நடிகர் விஜய் தனது படங்கள் தரமாக உருவாக செலவு செய்வதை விட அதிகளவு சம்பளத்தை தானே வாங்கிக் கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு கோட் படத்தின் சிஜி, டீ ஏஜிங் காட்சிகள் பிசிறு தட்டிய நிலையில் எழுந்துள்ளன. இந்நிலையில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க எச். வினோத் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் தளபதி 69 படத்துக்காக நடிகர் விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பட்ஜெட் எவ்வளவு?: விஜய்யின் சம்பளமே 275 கோடி என்றால் படத்தின் பட்ஜெட் கோட் படத்தை போல 400 முதல் 450 கோடி வரை செல்லும் என்கின்றனர். ஆனால், அந்தளவுக்கு பெரிய வசூலை அந்த படம் சாதிக்குமா? விஜய்யின் கடைசி படம் என்றாலும் எச். வினோத் இதற்கு முன் இயக்கிய எந்தவொரு படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில், இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பு நிறுவனம் செலவு செய்யுமா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











