Actor Vijay: விஜய்யின் GOAT பட ரிலீஸ் குறித்த அப்டேட்.. அடுத்த மாதம் அறிவிப்பு!
நடிகர் விஜய்: விஜய்யின் அடுத்தடுத்த மாஸ் படங்கள் மற்றும் வெற்றி கூட்டணி காரணமாக அடுத்தடுத்து அவரது படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. கடந்த ஆண்டில் மட்டுமே வாரிசு மற்றும் லியோ என அடுத்தடுத்த படங்களை கொடுத்தார் விஜய். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாகினர். தங்கள் ஹீரோ தான் பெஸ்ட் என்று அவர்கள் மற்றவர்களிடம் மார்த்தட்டி கூறும் சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.
விஜய்யை ஹீரோவாக மட்டுமே பார்த்துவந்த அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய இடியாகவே அமைந்தது. முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் மூலமாக அவர் பல பொதுநிகழ்ச்சிகளில் ஈடுபட்ட நிலையில் அவரது அரசியல் என்ட்ரி முன்னதாகவே கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், அவரது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பை உற்சாகமாகவே ஏற்றுக்கொண்டனர். ஆயினும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 69 படங்களுடன் தங்களது ஹீரோவை தொடர்ந்து திரையில் பார்க்க முடியாது என்ற விஷயம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் 40 ஆண்டுகால திரைப் பயணத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார். தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ள விஜய், அந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து கட்சியை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறார் விஜய்.
கேரளாவில் விஜய் பட சூட்டிங்: இந்நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கிற்காக சென்றுள்ளார் விஜய். அங்கு அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் ஏராளமானோர் காணப்படும் நிலையில் முதல் நாளிலிருந்து விஜய்க்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். அவரது சூட்டிங் நடக்கும் இடம் மற்றும் அவர் தங்கியுள்ள ஹோட்டல் போன்ற இடங்களில் தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். விஜய்யும் இதற்கெல்லாம் நான் சளைத்தவன் இல்லை என்று கூறும் வகையில் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்.
ரசிகர்களுடன் பேச்சு: நேற்று மாலை கிரீன் ஃபீல்ட் மைதானத்திற்கு வெளியில் திரளான ரசிகர்கள் விஜய்க்காக காத்திருந்த நிலையில் அவர்கள் முன்பு தோன்றிய விஜய் உற்சாகமாக பேசினார். கேரளா மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் தனது இரு கண்களை போன்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் கேரள ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திரளாக குவிந்திருந்த ரசிகர்கள் முன்னிலையில் அவர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து அவர்கள் கைகளால் மாலை போட்டுக் கொள்வதும் போகும் இடங்களில் அவர்களுக்கு கையசைத்து உற்சாகம் செய்வதும் என விஜய் தன்னுடைய அடுத்தடுத்த செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறார்.
அடுத்த மாதம் நிறைவடையும் சூட்டிங்: GOAT மற்றும் தளபதி 69 படங்கள் அவரது இறுதி படங்களாக அமைந்துள்ள நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் ஆகஸ்ட் 23ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டப்களில் விஜய் நடித்து வருகிறார். இதில் ஒரு கேரக்டர் வில்லன் என்றும் கூறப்படுகிறது.
சயின்ஸ் பிக்ஷன் கதைக்களம்: சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் டைம் டிராவலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளனது. படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து வேலை வாங்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அடுத்த மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது இது குறித்த அப்டேட்டிற்காக தற்போது ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











