Actor Vijay: ரஷ்யா செல்லும் GOAT படக்குழு.. தேர்தலையொட்டி விஜய்யின் மாஸ்டர் பிளான்!
சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, ஸ்நேகா, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் The greatest of all time. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் அவரது கேங்கை சேர்ந்த வைபவ், பிரேம்ஜி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது மீண்டும் சென்னையையொட்டிய பகுதிகளில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ள நிலையல் அடுத்தாக தளபதி 69 படத்தை மட்டும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் GOAT படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த படம் மங்காத்தா. இதே போன்றதொரு படத்தை விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெங்கட்பிரபு எப்படி பூர்த்தி செய்வார் என்பதும் முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஆயினும் அவரது அடுத்தடுத்த படங்கள் பீஸ்ட், வாரிசு, லியோ கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கிய நிலையில், தற்போது படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்கள் நடந்து வருகின்றன. படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி முழு திட்டமிடலுடன் படத்தின் சூட்டிங் தற்போது வெங்கட்பிரபு மேற்கொண்டு வருகிறார்.
GOAT படம்: தற்போது சென்னையில் GOAT படத்தின் சூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு அடுத்ததாக படக்குழுவினர் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் அடுத்தடுத்து முக்கியமான காட்சிகளை எடுத்து முடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தொடர்ந்து அங்கு 35 நாட்கள் சூட்டிங் நடைபெறும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய அங்கேயே நிறைவுற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டைட்டில் பாடல்: குறிப்பாக டைட்டில் சாங்கில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டவர்கள் சிறப்பாக பங்கேற்று உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியீடு குறித்தும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்துள்ள நடிகர் விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் திட்டம்: இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதையொட்டியே ரஷ்யாவின் ஒரு மாதத்திற்கு மேல் GOAT படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக தன்னுடைய தளபதி 69 படத்தில் இணையவுள்ளார் விஜய். தன்னுடைய தேர்தல் பணிகள் பாதிக்காத வண்ணம் இந்த படத்தில் நடித்து முடிக்க உள்ளதாக அவர் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தை டிவிவி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: ஆனால் படத்தின் இயக்குனர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தளபதி 69 படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்குனராக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைப்போல கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், அட்லீ உள்ளிட்டவர்களும் இந்த லிஸ்டில் உள்ளனர். இவர்களில் விஜய்யின் இறுதிப் படத்தை இயக்கவுள்ள இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











