For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மாயம் செய்யும் மக்கள் செல்வன்.. இன்னைக்கு லாபம்.. நாளைக்கு துக்ளக் தர்பார் அடுத்து அனபெல் சேதுபதி!

  |

  சென்னை: சில ஹீரோக்கள் ஆண்டுக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்யவே படாதபாடு பட்டு வரும் நிலையில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மட்டும் மாசத்துக்கு 3 முதல் 4 படங்களை ரிலீஸ் செய்து மாயம் செய்து வருகிறார்.

  Recommended Video

  Laabam Movie Audience Review | Vijay Sethupathi | Jananathan | Filmibeat Tamil

  பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தான் ஆண்டுக்கு 10 முதல் 20 படங்களில் நடிப்பார்கள். அவர்களுக்கான கால்ஷீட் மற்றும் கெட்டப் சேஞ்ச் போன்ற விஷயங்கள் பெரிதாக இருக்காது.

  ஹாட் பிகினியில் சன் பாத்… சூரியனையே சூடேற்றும் சன்னி லியோன் !ஹாட் பிகினியில் சன் பாத்… சூரியனையே சூடேற்றும் சன்னி லியோன் !

  ஆனால், ஹீரோ, வில்லன் என கலக்கி வரும் விஜய்சேதுபதியால் மட்டும் எப்படி இப்படியொரு விஷயம் சாத்தியமாகிறது என சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் அண்ணாந்து பார்த்து வருகிறது.

  ரிலீசானது லாபம்

  ரிலீசானது லாபம்

  மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. கார்ப்பரேட் ஓனர்களை எதிர்த்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் போராளியாக இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இசைத் துறையில் ஆர்வமுள்ள பெண் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். வில்லனாக பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் ஜகபதி பாபு நடித்துள்ளார்.

  நல்ல வரவேற்பு

  நல்ல வரவேற்பு

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள லாபம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், திரையரங்குகளை மீண்டும் இளைஞர்கள் பட்டாளம் நோக்கி செல்வது பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  நாளை துக்ளக் தர்பார்

  நாளை துக்ளக் தர்பார்

  திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் லாபம் திரைப்படம் வெளியான நிலையில், நாளை சன் டிவியில் நேரடி ரிலீசாக விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் மாலை 6.30 மணிக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. நாளை மறுநாள் நெட்பிளிக்ஸில் அந்த படம் ஒடிடி ரசிகர்களுக்காகவும் ஸ்ட்ரீமிங்காக காத்திருக்கிறது.

  ராஷி கன்னா உள்ளிட்டோருடன்

  ராஷி கன்னா உள்ளிட்டோருடன்

  இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷி கன்னா மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ராஷி கன்னா உள்ளிட்ட படக்குழுவினருடன் மொபைலில் ஏதோ பார்ப்பது போல இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து, "நாங்க என்ன பார்க்கிறோம்னு சொல்லுங்க பார்ப்போம்" என கேட்க பலரும் துக்ளக் தர்பார் படத்தை தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அடுத்த வாரம் அனபெல் சேதுபதி

  அடுத்த வாரம் அனபெல் சேதுபதி

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லாபம், துக்ளக் தர்பார் என இரு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த வாரமும் ஒரு படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட ரெடியாக வைத்திருக்கிறார் நம்ம மக்கள் செல்வன். இந்த மனுஷனால் எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது. தூங்குவாரா மாட்டாரா என மற்ற முன்னணி நடிகர்களே தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். பாலிவுட்டுக்கு சென்ற நம்ம ஆடுகளம் ஹீரோயின் டாப்சி காஞ்சனா, கேம் ஓவர் படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.

  வாழ்வு தான்

  வாழ்வு தான்

  மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் விக்ரம் படத்தில் இணைந்து நடித்து வரும் விஜய்சேதுபதிக்கு ஷிவானி நாராயணன், மைனா நந்தினி என மூன்று ஹீரோயின்கள் வேற நடித்து வருகின்றனர். அடுத்ததாக ரெயின் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் ஹீரோவாகவும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

  வெயிட்டிங் லிஸ்ட்டில்

  வெயிட்டிங் லிஸ்ட்டில்

  இதுமட்டுமின்றி ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து முடித்த இடம் பொருள் ஏவல், மாமனிதன் என இரு படங்களும் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள கடைசி விவசாயி மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பல படங்களும் ரிலீசாக வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்துக் கிடக்கின்றன.

  English summary
  Actor Vijaysethupathi has more number of films release line up for this month. Today Laabam, Tomorrow Tughlaq Durbar and next week Annabelle Sethupathi.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X