விவசாயிகளின் நலனுக்காக போராடும் விஜய் சேதுபதி!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி மற்றும் எஸ்பி ஜனநாதன் கூட்டணி இரண்டாவது முறையாக லாபம் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

Recommended Video

Laabam Movie Review | Poster Pakiri Review | Filmibeat Tamil

கொரோனா லாக்டவுனுக்கு மத்தியிலும் இப்படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டு செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீசாகிறது.

தனது ஒவ்வொரு படங்களிலும் கார்ப்பரேட்டுகள் மக்களின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறது என்பதை காட்டி வந்த எஸ்பி ஜனநாதன் லாபம் படத்தில் விவசாயிகளின் நலனுக்காக போராடும் போராளியாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்துள்ளார்.

இமேஜைப் பற்றி கவலைப்படாமல்

இமேஜைப் பற்றி கவலைப்படாமல்

முன்னணி ஹீரோ என்ற இமேஜைப் பற்றி கவலைப்படாமல் வில்லன், ஹீரோ,குணச்சித்திர கதாபாத்திரம் எது கிடைத்தாலும் அதை தன்னுடைய ஸ்டைலில் நடித்து ரசிகர்களுக்கு பரிமாறுவதில் விஜய்சேதுபதி இப்போதைக்கு நம்பர் ஒன்னில் இருக்கிறார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

நல்லவன் இல்லாத வில்லன்

நல்லவன் இல்லாத வில்லன்

மாநகரம், கைதி வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கொஞ்சம் கூட நல்லவன் இல்லாத வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவருக்கும் இப்படத்தில் சமமான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இரண்டாவது முறையாக இணைந்த

இரண்டாவது முறையாக இணைந்த

கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு செப்டம்பர் 9ஆம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ்பி ஜனநாதன் உடன் முதல்முறையாக இணைந்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தில் நடித்து உள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் .

விவசாயியாக விஜய் சேதுபதி

விவசாயியாக விஜய் சேதுபதி

பொதுவாகவே எஸ்பி ஜனநாதன் தன்னுடைய திரைப்படங்களில் சமூக அரசியலையும் கார்ப்பரேட்டுகளின் அதிகார மீறல்கள் பற்றியும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் அதேபோல லாபம் படத்திலும் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி விவசாயத்தை அழித்து கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக போராடும் விவசாயியாக விஜய் சேதுபதியை இதில் நடிக்க வைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லாபம் படத்திற்கும் விஜய்சேதுபதியின் பல்வேறு கெட்டப்பு களுக்கும் எஸ்பி ஜனநாதனின் வசனங்களையும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் கூடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X