'விஜிமா லவ் யூ': தளபதியை சந்தித்த மகிழ்ச்சியில் உருகும் ஸ்ரீமன்
Recommended Video

சென்னை: நடிகர் ஸ்ரீமன் தனது நண்பர் விஜய்யை சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.
விஜய்யும், நடிகர் ஸ்ரீமனும் நண்பர்கள் என்பது திரையுலகினர் மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். பல ஆண்டுகளாக அவர் விஜய்யின் படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக பைரவா படத்தில் ஸ்ரீமன் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது நண்பன் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை ஸ்ரீமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விஜய்
ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் பாசிட்டிவிட்டி கிடைக்கிறது. 22 ஆண்டு கால நட்பு. ஆதரவு, வழிகாட்டுதலுக்கு நன்றி. உங்களின் எளிமை, அடக்கம், பப்ளிசிட்டி இல்லாமல் சமூகத்திற்கு உதவும் குணம், அமைதியாக வாழ்வது, கடினமாக உழைப்பதை பார்த்து ரசிக்கிறேன். விஜிமா லவ் யூ சந்தித்ததற்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஸ்ரீமன்.
நண்பன்
விஜய் மாதிரி ஒரு பிசியான ஆள் ஃப்ரீ டைமில் நண்பர்களை சந்தித்து பேசிகிறார் என்றால் நாமும் ஏன் நண்பர்களை சந்திக்கக் கூடாது என்று மக்களை யோசிக்க வைக்க அந்த புகைப்படத்தை வெளியிட்டதாக ஸ்ரீமன் கூறியுள்ளார்.
நலமா
தளபதி நலமா. இன்னும் தாங்கித் தாங்கி நடக்கிறாரா என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு ஓடிப் போய் குதிரையை பிடிக்கும் அளவுக்கு செமயாக உள்ளார் என்கிறார் ஸ்ரீமன்.
அப்டேட்
ஸ்ரீமனிடம் போய் தளபதி 63 அப்டேட் கேட்டால் அவர் எப்படிங்கண்ணா கொடுப்பார்.


Click it and Unblock the Notifications











