ஹீரோ .. ஹீரோ ..

By Staff

இந்தியில் நடிக்க வருமாறு நடிகர் சல்மான் கான் விடுத்த அழைப்பை விக்ரம் மறுத்துவிட்டார்.

ஏவி.எம் ஸ்டுடியோவில் சல்மான் கான் நடிக்க பிரியதர்ஷன் இயக்கும் ஒரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.அதிலேயே பக்கத்தில் பிரமாண்ட செட்டில் ஷங்கர் இயக்க விக்ரம் நடிக்கும் அந்நியன் சூட்டிங்கும் நடக்கிறது.

உணவு இடைவேளையிலும் ஷாட் இடைவேளையிலும் விக்ரமும் சல்மானும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

விக்ரம் நடித்த சேது படத்தின் இந்திப் பதிப்பில் நடித்தவர் சல்மான். நடிப்பில் சீயான் பக்கத்தில் கூட வர முடியாது என்றாலும்ஏதோ ஒப்பேற்றினால் சல்மான். விக்ரம் அளவுக்கு தன்னால் அந்த கேரக்டரை செய்ய முடியவில்லை என்பதை ஓப்பனாகவேஒப்புக் கொண்டார் சல்மான்.

சேதுவில் இருந்து விக்ரமின் பேன் ஆகிவிட்ட சல்மான், ஏவிஎம் ஸ்டுடியோவில் சும்மா பேசிக் கொண்டிருந்தபோது தன்னுடன்இந்தியில் நடிக்க அழைத்திருக்கிறார். இந்தி உலகில் தரப்படும் சம்பளம் குறித்தும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு கணம் ஆச்சரியமடைந்த விக்ரம், பெரிய கும்பிடாய் போட்டுவிட்டாராம்.

தமிழ்லேயே நான் நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. எனக்கு தமிழே போதும், வேறு எதுவும் வேண்டாம் சார் என்று சல்மான் மனம்புண்படாத மாதிரி நீட்டாக சொல்லிவிட்டாராம்.

முன்பே அமிதாப்புடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பையும் விக்ரம் உதறிவிட்டது நினைவுகூறத்தக்கது.

அந்நியன் படத்தின் இரு பாடல்களை மலேசியாவில் இதுவரை சினிமாக்காரர்களின் கேமரா பார்க்காத ஒரு மிக அட்டகசமானஸ்பாட்டில் படம் பிடித்திருக்கிறார்களாம். ஷங்கருக்கு எப்படித்தான் இந்த இடம் தெரிந்ததோ என்று புழகாங்கிதப்படுகிறார்விக்ரம்.

இதற்கிடையே பிதாமகன் படத்திற்கு தேசிய விருது பெற்றதற்காக குவைத்தில் விக்ரமுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அந்தவிழாவில் வசூலாகும் நிதியை சுனாமி நிவாரண நிதிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விக்ரம், பிதாமகன் இயக்குனர் பாலா ஆகியோருக்கு பிப்ரவரி 10ம் தேதி குவைத் பிரன்ட்லைனர்ஸ் என்ற அமைப்பின் சார்பில்இந்த பாராட்டு விழா நடக்கிறது. அந்தகால மசாலா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

நடிகர் விக்ரம் பற்றிய திரைத் தொகுப்பும், விக்ரம் எத்தனை விக்ரமடா என்ற நிகழ்ச்சியும் விழாவில் இடம் பெறவுள்ளன.

இந்த விழா மூலம் வசூலாகும் நிதியை, சுனாமி நிவாரணத்துக்கு வழங்க குவைத் பிரன்ட்லைனர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகஅதன் தலைவர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X