ஹீரோ .. ஹீரோ ..
பிதாமகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடருந்து தேசிய விருதை பெற்ற விக்ரம் சென்னை திரும்பிநிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:
கடந்த 12 ஆண்டு காலமாக நான் திரையுலகில் இருந்து வருகிறேன். பல்வேறு சிரமங்கள், கஷ்டங்கள் தாங்கியிருக்கிறேன். இத்தனை காலகஷ்டங்களுக்குக் கிடைத்த பரிசாகவே இந்த விருதை நினைக்கிறேன்.
எனக்கு பக்க பலமாக இருக்கும் ரசிகர்கள், என்னை நம்பிப் படமெடுத்த தயாரிப்பாளர்கள், என்னை செதுக்கிய இயக்குநர்களுக்கும் இந்தவிருதை காணிக்கையாக்குவதே சரியாக இருக்கும்.
கடந்த 51 ஆண்டுகளில் இதுவரை தமிழ் திரையுலகிலிருந்து 3 நடிகர்கள் மட்டுமே தேசிய விருது பெற்றுள்ளனர். இது ஆச்சரியமாகஉள்ளது. நமது படங்கள் தேசிய அளவில் இன்னும் பேசப்பட வேண்டும், அந்த மாதிரி படங்களை நாம் உருவாக்க வேண்டும். இன்னும்விருதுகளை நம்மால் வெல்ல முடியும்.
அந்நியனில் நான் செய்து வரும் கேரக்டர் மிகவும் சவாலானது. இதற்கு இன்னும் ஒரு தேசிய விருது கிடைக்கும் எனது ரசிகர்கள்கூறுகிறார்கள். கிடைத்தால் சந்தோஷம்தானே.
அதே நேரத்தில் எனக்கு விருதுகள் முக்கியமில்லை. சவால் நிறைந்த, திறமையை வெளியே தோண்டி எடுத்து வரும் ரோல்களைச் செய்யவேண்டும். எனக்குள் ஒளிந்திருந்த நடிகனை வெளியே கொண்டு வந்தவர்கள் பாலாவும், தரணியும். அவர்களுக்கு எனது தனிப்பட்டநன்றிகள்.
பிதாமகன் ஆந்திராவில் பல இடங்களில் தமிழைவிட அதிகமாக கலெக்ஷன் செய்தது தெரியுமா. மொழி கடந்த அந்த வெற்றிக்குபாலாவின் இயக்கமே காரணம்.
விக்ரமுக்கு மேலும் பல துன்பங்கள் (பட வாய்ப்புக்கள்) தரப் போகிறேன் என்று பாலா கூறியிருக்கிறார். அந்த இனிய துன்பங்களுக்காகநான் காத்திருக்கிறேன்.
இந்திப் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. விது வினோத் சோப்ரா இதை இயக்கவுள்ளார். அதேபோலதெலுங்கிலும் ஒரு படம் செய்யவுள்ளேன். எனது அடுத்த தமிழ்ப் படம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்றார் விக்ரம்.
தேசிய விருது வாங்கிய பாலாவை அதே நிகழ்ச்சியில் தாதா சாகிப் பால்கே விருது பெற்ற இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனரானமிருணாள் சென் அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது குடுமி போல முடியை இழுத்துக் கட்டியிருந்த விக்ரமிடம் இது என்ன என்றுகேட்க, அந்நியன் படதுக்கான கெட்-அப் இது என்ற சொன்னபோது ஆச்சரியப்பட்டாராம்.
படத்துக்காக உருவத்தையே மாற்றிக் கொள்கிறீர்கள். பிதாமகன் பார்த்தேன். பிரமாண்டமான நடிப்பு அது, முடிந்தால் நாம் இருவரும்சேர்ந்து கூட ஒரு படம் செய்வோம் என்றாராம்.


Click it and Unblock the Notifications











