ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சேது படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமுக்கு சரியான படம் கிட்டவில்லை.

இப்போது வெளிவந்திருக்கும் "தில்" வெற்றிகரமாக ஓடுகிறது.

இதனால் அடுத்து வரவிருக்கும் கிங்யையும் நன்றாக ஓடவைத்து, தானும் ஒரு "கிங்"தான் என்று நிரூபிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையோடுஉள்ளாராம்.

விவேக்கின் "பட்ட"மாற்றம்

சமீப காலமாக காமெடியில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார் விவேக்.

இதற்கு முன்பு கவுண்டமணி, செந்திலிடம் உரத்த குரலில் ஒரு டயலாக் சொல்லிவிட்டு பிறகு அவரைத் திரும்பி நிற்கச் சொல்லி ஒரு உதை கொடுப்பார். இதுஒவ்வொரு படத்திலும் தவறாது இடம்பெறும் கண்கொள்ளாக் காட்சி.

இதுவே தித்திக்கும் காமெடியாகக் கருதப்பட்டு தமிழ்கூறும் நல்லுலகத்தால் சிரித்துத் தள்ளப்பட்டும் வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் விவேக். அதனால் பாராட்டும் பெற்றவர்.

அந்த சாதனைக்காக இவர், "சின்னக் கலைவானர்" என்ற பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டார்.

இப்போது அந்தப் பட்டம் செவிக்கு இனிப்பாக இல்லை என்று கருதி, "இளங் கலைவானர்" எனத் தன் பட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம்.

விக் ரெடி:

காந்தக் கண்ணழகி பிரியா ராமனின் அருமந்த கணவர் ரஞ்சித். இவர் நடிப்பில் தான் செய்த சாதனைகள் போதாதென்று எல்லோரையும் போலடைரக்ஷனிலும், தயாரிப்பிலும் இறங்குகிறாராம்.

ஹீரோ நம்ம சத்யராஜ் ஐயா தான்.

அப்ப, கதை ரெடியோ இல்லையோ "விக்" ரெடியாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X