ஹீரோ .. ஹீரோ ..
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விக்ரம் நடித்த படங்கள் எல்லாமே ஊத்திக்கொண்டே இருந்தன.
அந் நிலையில் தான் சேது வந்தது. விக்ரமின் தலையெழுத்தையே மாற்றிப் போட்டது.
அதன் பிறகு கமலுக்கு இணையான நடிகராக விக்ரம் பார்க்கப்பட்டு வருகிறார்.அவரும் அதற்கேற்றார் போல நடித்தும் வருகிறார்.
சேதுவுக்குப் பிறகு நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால், விக்ரம் கொஞ்சம்டல்லடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் வந்தது தில் படம். பெரும் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. சேது வசூலையே இந்தப் படம் தூக்கிச் சாப்பிட்டு விடும்என்கிறார்கள்.
இதையடுத்து ஆனந்தக் கூத்தாடும் விக்ரமின் கை நிறைய படங்கள் புக் ஆகியுள்ளன.
ஆனால், எல்லா படத்துக்குமே சென்டிமெண்டலாக 2 எழுத்தில் தலைப்பு வைக்கவேண்டும் என்கிறாராம். சேது மற்றும் தில் என தனது இரு பெரும் வெற்றிப்படங்களும் இரண்டு எழுத்து கொண்டவை.
இதனால், இனிமேல் நடிக்கும் படங்களையும் இரண்டு எழுத்துக் கொண்டதாகவேஇருந்தால் நல்லது என்று நினைக்கிறாராம். அடுத்ததாக தான நடிக்கும் படத்துக்கு கிங்என பெயரிட வைத்தாராம்.
அடுத்த படம் காசி( 2 எழுத்து!). இதற்கு முதலில் கண்மணிகள் என பெயர்வைக்கப்பட்டிருந்தது. முதல்ல படப் பெயரை மாத்துங்கப்பா என்று விக்ரம் கூறிவிட்டதால் காசியாக்கி விட்டனர்.
விக்ரமை வைத்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கும் 2எழுத்தில்தான் டைட்டில் வைக்கப்படுமாம்.
நல்லவேளை தனது பெயரை சுருக்கி ரம் என்று மாற்றாமல் விட்டாரே விக்ரம்!


Click it and Unblock the Notifications











