ஹீரோ .. ஹீரோ ..
டும் டும் டும் படத்தை இயக்கிய அழகம்பெருமாளின் டைரக்ஷனில் ஹைஜாக் என்ற படத்தில் நடிக்கிறார் விக்ரம்.
பிரஷாந்த்தின் அம்மாவும், விக்ரமின் அம்மாவும் கூடப் பிறந்த சகோதரிகள் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அண்ணன், தம்பிஎன்றாலும் இருவருக்கும் இடையே சுமூக உறவு இல்லை. விக்ரம் சினிமாவில் நிலைக்கத் தடுமாறிய காலத்தில் பிரஷாந்த்தின் குடும்பம்கண்டு கொள்ளவில்லை. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே நல்லுறவு இல்லை.
மேலும் சாமி, தமிழ் பட ஸ்டில்கள் தொடர்பாக விக்ரம்-பிரஷாந்த் இருவருக்கும் பெரும் லடாய் ஏற்பட்டது. அது முதல் இருவருமே கீரியும்,பாம்புமாகவே உள்ளனர்.
ஆனால் இருவரது புதிய படங்களில் அவர்களை அறியாமலேயே ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அடைக்கலம் படத்தில் பிரஷாந்த் ஜோடிஇல்லாமல் நடிக்கிறார்.
அதேபோல, விக்ரம் தனது அடுத்த படத்தில் ஹீரோயின் இல்லாமல் நடிக்கப் போகிறாராம். அழகம்பெருமாள் இயக்கத்தில் உருவாகும்ஹைஜாக் படத்தின் கதை மிகவும் விறுவிறுப்பானதாம்.
இதில் விக்ரமுக்கு ஜோடியே கிடையாதாம், டூயட்டும் கிடையாதாம். அந்நியன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் விக்ரம் நடிப்பார் என்றுகூறப்படுகிறது.
ஹைஜாக் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஹரியின் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.
ஹரி தற்போது சரத்குமாரை வைத்து "ஐயா"வை இயக்கி வருகிறார். விக்ரம் அந்நியன் படத்தில் பயங்கர பிஸியாக இருக்கிறார்.
இந்தப் படத்தை முடித்தபின், ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருவரும் இணைந்து சாமி மற்றும் அருள் எனஇரண்டு படங்களைக் கொடுத்துள்ளனர். அதில் சாமி மெகா ஹிட் ஆனது, அருள் தோல்வியடைந்தது.
மூன்றாவது படத்திற்காக இப்போதே இருவரும் நல்ல கதையைத் தேட ஆரம்பித்துவிட்டார்களாம். நல்ல கதையாக இருந்தால் ஹைஜாக்படத்துக்கு முன்பாகவே இதில் விக்ரம் நடிப்பாராம்.
ஆனால், ஹரியின் படத்துக்கு முன்னதாகவே தனது படத்தில் விக்ரமை நடிக்க வைத்துவிட அழகம்பெருமாள் தீவிரமாக முயன்று வருகிறார்.
பார்ப்போம், ஜெயிக்கப்போவது ஹரியா, இல்லை அழகம்பெருமாளா என்று.
அந்நியன் படத்தின் ஒரு பாடலை மலேசியாவில் இதுவரை யாரும் எடுக்காத இடங்களில் படமாக்கியிருக்கிறார்களாம். இப்படிப்பட்ட ஒருஇடத்தை ஷங்கர் எப்படித்தான் தேடிக் கண்டுபிடித்தாரோ என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் வியந்து கொண்டிருக்கிறார் விக்ரம்.


Click it and Unblock the Notifications











