ஹீரோ .. ஹீரோ ..
பெரும் வருத்தத்தில் இருக்கிறார் சீயான் விக்ரம். கஷ்டப்பட்டு, கண்ணை வருத்தி நடித்த காசி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம்குறைவாக வருவதாக அவர் காதுக்கு வரும் செய்திகள் அவரை இந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.
மலையாளத்தில் வெளியாகி தேசிய விருது வரை அடிபட்ட படத்தின் ரீமேக்தான் காசி. மலையாளத்தில் இயக்கிய அதேவினயன்தான் தமிழிலும் இயக்கினார். இந்தப் படத்திற்காக கண்களை இழந்த குருடன் போல மிகத் தத்ரூபமாக நடித்துகலக்கியிருக்கிறார் விக்ரம். இதற்காக கண் விழிகளை மேலே உயர்த்தியவாறு மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.
ஆனால், படத்தின் ரிசல்ட், விக்ரக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளதாம். தனது நடிப்பும், இளையராஜாவின் இசையும் படத்திற்குப்பெரிய பக்க பலமாக இருக்கும் என்று அவர் பெரிதும் நம்பியிருந்தார்.
இரண்டும் நன்றாக இருந்தும் ரசிகர்கள் பெரிய அளவில் படத்திற்கு ஆதரவு தராதது ஏன் என்று அவர் குழம்பிப் போயிருக்கிறார்.தமிழ் ரசிகர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்யைே என்று விரக்தியுற்றிருக்கிறார்.
ஆனால், திரைக்கதை சரியில்லை என்று கோடம்பாக்கம் எக்ஸ்பர்ட்கள் பேசிக் கொள்கிறார்கள். மலையாளத்தில் எடுத்ததைஅப்படியே எடுத்திருக்கக் கூடாது. கொஞ்சமாவது தமிழ்ப்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மலையாளப் படத்தில் எடுத்த லொகேஷன்களிலேயே இந்தப் படத்தையும் எடுத்ததை தவிர்த்திருக்க வேண்டும் என்றும்விக்ரமுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு சரி என்று சொல்லியிருக்கக் கூடாதோஎன்று இப்போது விக்ரம் யோசிக்கிறாராம். இதனால் தற்போதைக்கு ரீமேக் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது என்ற முடிவுக்கும்வந்திருக்கிறாராம்.
படம் சரியாக போகவில்லை என்று வருத்தப்பட்டாலும் கூட படத்தில் விக்ரமின் நடிப்பு ஒரு பார்வையற்றவரை அப்படியேநினைவுபடுத்துவது என்னவோ மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











