‘ஐ’ பட சம்பளத்தில் பாதி கொடுத்த விக்ரம்… ரியல் ஹீரோதான்!
சினிமாவில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினோமா, பிள்ளை குட்டிகளுக்கு சேர்த்து வைத்தோமா என்று சில ஹீரோக்கள் இருக்கின்றனர்.
சில ஹீரோக்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிற்காக செலவு செய்வார்கள். ஆனால் விக்ரம் இவற்றில் வித்தியாசமாக தனது சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக கொடுத்திருக்கிறாராம்.

இதய ஆபரேசன்
இதயநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு நடிகர் விக்ரம் ஏற்கனவே லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகளில்
விக்ரமின் உதவியினால் பணம் கிடைத்து இதயநோய் குணமாக ஒரு சிறுமி டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது தனது நன்றியை நடிகர் விக்ரமிற்கு தெரிவித்தார்.

ஐ விக்ரம்
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஐ பட சம்பளத்தை
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு விக்ரமை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ‘ஐ' படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம் விக்ரம்.

ரியல் ஹீரோதான்
படத்தில் நடித்ததோடு கடமை முடிந்தது பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டோம் என்றில்லாமல் நடிகர் விக்ரம் தான் சம்பாதித்த பணத்தை பிறருக்கு உதவியாக செய்கிறார். இதன் மூலம் தான் ரியல் ஹீரோதான் என்பதை விக்ரம் நிருபித்துள்ளார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











