கேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம், பிரபாஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி
சென்னை: வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு நடிகர்கள் விக்ரம் ரூ. 35 லட்சமும், பிரபாஸ் ரூ. 25 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் ரூ. 19, 500 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் கேரளாவுக்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். தலா ரூ. 25 லட்சம் அளித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஆகியோர் கேரளாவுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கேரள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











