Don't Miss!
- News
வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சியான் விக்ரமின் ‘கோப்ரா’... இணையத்தில் வெளியான ஹாட் அப்டேட்.!
சென்னை : நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படம் குறிதத ஹாட் அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இப்படத்தின் விக்ரம் ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
வெறும்
3
லட்சம்
தானா...பெட்டி
கொண்டு
வந்தவர்
சம்பளத்தை
விட
குறைவா
இருக்கே
இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து
அருள்நிதியின் டிமாண்டி காலனி, நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் நடித்து விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமிற்கு ஜோடியாக கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

கோப்ரா
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்பத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குனர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது.

படப்பிடிப்பை முடித்தார்
இந்த நிலையில் விக்ரம், கோப்ரா திரைப்படத்தின் தனது பகுதியை முடித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சியான் விக்ரம் சார், தனது படப்பிடிப்பை முடித்தார். இது என்ன ஒரு மாயாஜால அனுபவம். உங்களுடன் இணைந்து வேலை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். நீங்கள் ஒரு நடிப்பு அசுரன் நிச்சயம் . என பகிர்ந்துள்ளார். விக்ரம் தனது பகுதி படப்பிடிப்பை முடித்தை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அக்ஷன் த்ரில்லர் மூவி
கோப்ரா சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ளது. இதில் விக்ரம் தனது பகுதிகளை மூடியிருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் அடுத்ததாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முழுமையான படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.