twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா வரலாற்றிலேயே.. அதிக விலைக்கு இந்தி டப்பிங் உரிமையை கைப்பற்றிய கமலின் விக்ரம்!

    |

    சென்னை : கோலிவுட்டில் பிஸியான இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    போதா குறையாக இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    அட... அறந்தாங்கி நிஷா... வசந்தபாலன் படத்துலயா… சூப்பர் தான் போங்க!அட... அறந்தாங்கி நிஷா... வசந்தபாலன் படத்துலயா… சூப்பர் தான் போங்க!

    கமல்ஹாசனை இயக்குவது வாழ்நாள் கனவு என நினைத்துக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் இப்பொழுது கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்க கொண்டிருக்க இப்படத்தின் இந்தி உரிமை பல கோடி ரூபாய்க்கு வாங்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

    இந்தியன் 2 தாமதம்

    இந்தியன் 2 தாமதம்

    சினிமாவின் பிரம்மாண்டம் என அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் 2. O வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் பல தடங்கல்களை தாண்டியும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தயாரிப்பாளருக்கும் படக்குழுவுக்கு ஏற்பட்ட பூசல் காரணமாக படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் இன்று வரை நீடித்துக் கொண்டுள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தை தொடங்க இருந்த நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்பதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.

    வசூல் சாதனை

    வசூல் சாதனை

    மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தை இயக்கி இப்பொழுது தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் . விஜய் இதுவரை பல மாஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மாஸ்டர் திரைப்படத்தில் ப்ரொஃபஸராக வித்தியாசமாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். மேலும் இதில் விஜய் சேதுபதி வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் அடுத்து மிரட்டியிருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதிக் கொள்ளும் காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்தது. லாக்டவுனுக்கு மத்தியிலும் மாஸ்டர் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்தது. மேலும் 2021ல் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களுக்குள் வந்த ஒரே இந்திய திரைப்படம் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது .

    விக்ரம்

    விக்ரம்

    மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யாருடைய படத்தை இயக்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அதிரடியாக தனது கலையுலக குருவான கமல்ஹாசனை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு "விக்ரம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் கமல்ஹாசனின் பழைய திரைப் படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பக்காவாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. மலையாள சினிமாவில் இதற்கென தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு நடிப்பு ராட்சசனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசில் வேலைக்காரன்,சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்பொழுது விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்தி டப்பிங் உரிமை

    இந்தி டப்பிங் உரிமை

    சில வாரங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை புரட்டிப் போட்டது. அதில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் மூவரின் முகங்களும் இருக்க ரசிகர்கள் இதற்கு மிகப் பெரிய ஆதரவு கொடுத்தனர் . மாஸ்டர் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானதை தொடர்ந்து விக்ரம் படமும் 5 மொழிகளில் வெளியாகிறது. படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இதன் டப்பிங் உரிமைகள் பல கோடிகளுக்கு விலை போக தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக விக்ரம் இந்தி டப்பிங் உரிமை 35 கோடி ரூபாய்க்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

    தர்பார் டப்பிங் உரிமை

    தர்பார் டப்பிங் உரிமை

    இதற்கு முன்பாக இந்தி டப்பிங் உரிமை அதிக விலைக்கு வாங்கப்பட்ட படங்களாக தர்பார், சர்க்கார், மாஸ்டர், பிகில் இருந்து வந்தது. இந்த லிஸ்டில் இப்போது சூர்யாவின் வாடிவாசல் இந்தி டப்பிங் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுவரை இருந்த சாதனைகளை விக்ரம் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே 35 கோடி ரூபாய்க்கு ஹிந்தி டப்பிங் உரிமை வாங்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

    உச்சமான ரேட்

    உச்சமான ரேட்

    நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே இந்திய அளவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அதே போல விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இந்திய அளவில் பிரபலமான நடிகர்களாக உள்ளனர். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் அனைவராலும் கவனிக்க கூடிய முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களும் இப்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு வாங்கப்பட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    English summary
    Kamal Hassan starrer Vikram is in big demand. Sources say that the movie's Hindi dubbing rights has been sold out for whooping prize.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X