காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புது படத்திற்கு பூஜை போட்டாச்சு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் தமிழ், மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படுகிறார். கடந்த ஆண்டு காளிதாஸ், பிரிட்டன் மாடல் தாரிணியை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ள காளிதாஸ் படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை இன்று போடப்பட்டது.

நடிகர் ஜெயராம் தமிழ், மலையாள படங்களில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இவர் நடித்துள்ள தெனாலி, பஞ்சதந்திரம் படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படங்கள். சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Vikram movie actor kalidas jayaram starrer Nila varum velai

மலையாள நடிகர் ஜெயராம்: இவர், நடிகை பார்வதியை கடந்த 1992 ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கமலின் மகனாக இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். விக்ரம் படத்திற்கு பிறகு காளிதாஸ் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக மாறினார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

காளிதாஸ் ஜெயராம்: மலையாளத்தில் கொச்சு கொச்சு என்ற படத்தில், ஏழாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் காளிதாஸ் ஜெயராம். தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் வெளியான மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பூமரம், நவரசா வெப் தொடர், பாவக்கதைகள் ஆந்தாலஜி, நட்சத்திரம் நகர்கிறது போன்ற திரைப்படத்தில் நடித்தார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பாவக்கதை ஆந்தாலஜியில் திருநங்கையாக நடித்து கை தட்டலை பெற்றார்.

நிலா வரும் வேளை: இதற்கிடையே காளிதாஸ் ஜெயராம் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அப்படத்திற்கு நிலா வரும் வேளை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஹரி இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X