ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சூப்பர் ஸ்டார் இலக்கை நோக்கி படு வேகமாக போய்க் கொண்டிருக்கும் விக்முரக்கு தமிழ் எல்லை கடந்து பலவாய்ப்புகள் தேடி வந்துள்ளன.

இந்தியில் இரண்டு படங்களில் நடிக்க விக்ரமை அணுகியுள்ளனர். அதேபோல ஒரு ஆங்கிலப் பட வாய்ப்பும்கதவைத் தட்டியுள்ளதாம்.

பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தொலைபேசி மூலம்விக்ரமிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். அதேபோல, ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள இந்திப்படத்தில் விக்ரமை நடிக்க கோரியுள்ளாராம்.

இதுதவிர, ஆங்கிலப் பட வாய்ப்பும் விக்ரமைத் தேடி வந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இயக்குனர்தான் தயாரிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் நடிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்தப் படத்தில்அமிதாப்பச்சனும் இருக்கிறாராம். இதில் நடிக்க விக்ரம் தீவிரமாக பரிசீலித்து வருகிறாராம்.

சேதுவுக்குப் பிறகு ஏற்பட்ட திருப்பத்தை விடவும், தற்போது பிதாமகனுக்குப் பிறகு விக்ரமைத் தேடி அவரேஎதிர்பாராத அளவுக்கு ஏராளமான வாய்ப்புகள் வருவதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

மீண்டும் இந்திப் படங்களில் சரிகா

சரிகா மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

கமல்ஹாசனை விட்டு பிரிந்து மும்பை சென்று விட்ட சரிகா, அங்கு தனது மகள்களோடு புதிய வாழ்க்கையைத்தொடங்கியுள்ளார். தனது தீவிர முயற்சியின் பலனாக ஜூலி என்ற இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார்.

டி.விதொகுப்பாளராக இந்தப் படத்தில் சரிகா நிடிக்கிறார். காதலும், காமமும், மோதலும் நிறைந்த கலவையானகதையாம் ஜூலியின் கதை. சிவதாஸ்னி படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X