ஹீரோ .. ஹீரோ ..
கன்னடம்- தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், தமிழில் விக்ரமை வைத்துப் பிரமாண்டமாகஎடுக்கப்படவுள்ளது.
தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகராக இருக்கும் என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கஆந்திராவாலா என்ற படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.
ஆந்திர திரைப்படவரலாற்றில் மிக அதிகமான வசூலை அள்ளிய படமாக ஆந்திராவாலா திகழ்கிறது.
இதே படத்தை, கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனீத் நடிக்க வீர கன்னடிகா என்ற பெயரில் கன்னடத்திலும்தயாரிக்கப்பட்டு வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.
இதையடுத்து இந்தப் படத்தை தமிழிலும் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழில் விக்ரம் நடிக்கவிருப்பதாககூறப்படுகிறது. படத்திற்கு மதராசி அல்லது மெட்ராஸ்காரன் என்று பெயர் சூட்டப்படலாம் என்று பேச்சு உள்ளது.
தெலுங்கு, கன்னடத்தை விட அதிபிரமாண்டமாக தமிழில் தயாரிக்க தயாரிப்பாளர் தரப்பு விருப்பப்படுவதால்தற்போது விக்ரம் கையில் உள்ள படங்களையெல்லாம் முடித்த பின்னர் இந்தப் படத்தைத் தொடங்கதிட்டமிட்டுள்ளனர்.
இப்போது ஹரி இயக்கும் அருள் படத்தில் பிஸியாக உள்ளார் விக்ரம்.
படம் தமிழ்புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











